இராமேஸ்வரம், மார்ச் 27-
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சனிக்கிழமை 400-க்கும் மேற்பட்ட படகுகளில் 1,500 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஞாயிறன்று காலை மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் நம்பு மாரி என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் அதிலிருந்த மீனவர்கள் துரை, தில்லைமுத்து, இருளாப்பன், முருகன் ஆகிய நான்கு மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களைக் கடலோரக் காவல்படையினர் தேடிவருகின்றனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றிருக்கலாம் என்ற அச்சம் மீனவர்களின் குடும்பத்தினரிடையே உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: