சேலம், மார்ச் 26-
சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் பகுதியில் இருந்து சேலத்திற்கு வந்து கொண்டிருந்த மணல் லாரி பழுதாகிச் சாலையில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் திருச்சியில் இருந்து சேலம் வந்த அரசுப்பேருந்து நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் பேருந்தின் நடத்துநர் குமார் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பேருந்து அதிவேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: