கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 12வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பரில் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. அதில் நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதுவது யார் என்பதை முடிவு செய்வதற்காக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 12வது சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவை ஆனந்த் எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே மிகவும் துல்லியமாக ஆடினார் நாகமுரா. இதனால் 26 நகர்த்தல்களில் தோல்வியை ஒப்புக்கொண்டார் ஆனந்த்.
இன்னும் 2 சுற்றுகள் மீதமுள்ள நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவது யார் என்பதில் கருணா, செர்ஜி கர்ஜாகின், ஆனந்த் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. கருணாவும், கர்ஜாகின்னும் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்கள். 6.5 புள்ளிகளுடன் ஆனந்த் 2ம் இடத்தில் உள்ளார். சனிக்கிழமை ஓய்வுநாள். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் ஆனந்த் அனிஷ் கிரியுடன் விளையாட உள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: