accused-647_032616025608 volleyball-story_647_032616103308
கொல்கத்தா,மார்ச்.26-
காதலிக்க மறுத்த காரணத்தால் மேற்கு வங்கத்தில் கைப்பந்து வீராங்கனை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் 24 பர்கான மாவட்டத்தை சேர்ந்த சங்கீதா எய்ச் என்ற டீனா . இவர் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் கைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக இருந்து வந்தார். 9 ம் வகுப்பு படிக்கும் இவர் சிறு வயது முதல் கைப்பந்து விளையாட்டில் ஏற்பட்ட ஈடுபாட்டில் மிக துடிப்பான வீராங்கனையாக திகழ்ந்தார். ஏராளமான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கங்களை குவித்திருக்கிறார். அதன் மூலம் தேசிய அளவிலான 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் விளையாடும் தகுதியையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில் பிரிவில் வெள்ளியன்று வடக்கு 24 பர்காணா மாவட்டத்தில் நோடன்புகூர் கைப்பந்து முகாமில் சக வீராங்கனைகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சக கைப்பந்து வீரர் சுரதா சிங் என்பவர் அங்கு வந்திருக்கிறார். பின்னர் சங்கீதாவை சந்தித்து தனது காதலை தெரிவித்துள்ளார். அதனை ஏற்க இசை மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சங்கீதாவை பின்தொடர்ந்து சென்ற சசுப்ரதா சிங் திடீரென சங்கீதாவை கத்தியால் இடைவிடாது குத்தியிருக்கிறார். இதனை பார்த்த பயிற்சியாளர் ஒருவர் தடுக்க முயன்ற போது அவருக்கும் கத்தி குத்து விழுந்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் கைப்பந்து வீராங்கனை உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை தொடர்ந்து காவல்நிலையத்தில் இன்று சுப்ரதா சிங் சரணடைந்திருக்கிறார். இச்சம்பவம் விளையாட்டுத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: