vnr-Ration Shop
விருதுநகர், மார்ச் 25-
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு நியாய விலைக்கடைகள் பூட்டியே கிடப்பதால் பொது மக்கள் நீண்ட தூரம் சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
விருதுநகர் -சிவகாசி சாலையில் உள்ளது முத்துராமலிங்கம் நகர். இங்கு மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் சுமார் இரண்டு கி,மீ. தொலைவிலுள்ள சேக்கிழார் தெருவில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதையடுத்து முத்துராமலிங்கம் நகர் பகுதியில் ரேசன்கடை தொடங்கவேண்டுமென மாதர் சங்கம் கையெழுத்து இயக்கம் நடத்தி விருதுநகர் ஆட்சியரிடம் அளித்தனர்,
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முத்துராமலிங்கம் நகர் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஜனவரியில் திறப்பு விழா நடைபெற்றது. ஆனால், மூன்று மாதங்கள் ஆகியும் கடை பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை.
அதாவது, சேக்கிழார் தெரு நியாயவிலைக் கடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இக்கடையிலிருந்து முத்துராமலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களை பிரித்து புதிதாக கட்டப்பட்டுள்ள கடைக்கு மாறுதல் செய்ய வேண்டும். ஆனால், கூட்டுறவுத்துறை இப்பணியைச் செய்யவில்லை. இதனால் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணப்பட்ட புதிய நியாய விலைக் கடை காட்சிப் பொருளாக மாறிவிட்டது. அவ்வழியே மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் ஓய்வு எடுத்து செல்லும் இடமாக மாறியுள்ளது.
இதேபோல், விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 27 மற்றும் 28-வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ஆண்டி கிணற்றுத் தெருவில் உள்ள நியாய விலைக்கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதையடுத்து, புதிய நியாய விலைக் கடை ரூ.5.50 லட்சம் செலவில் பெரிய காளியம்மன் கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சிப் பொது நிதியில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டாண்டுகளாகிவிட்டது, முறையாக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்த இந்த கடையும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை,

Leave A Reply

%d bloggers like this: