பொன்னேரி, மார்ச் 25-

மீஞ்சூரை அடுத்த தச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு மீஞ்சூர், நெய்தவாயல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்த சுமார் 30 பெண்கள் வெள்ளிக்கிழமை (மார்ச் 25) காலை நிறுவனத்தின் வேனில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை டிரைவர் தாஸ் ஓட்டினார்.

நெய்தவாயல் அருகே வேன் சென்று கொண்டிருக்கும் போது திடீரென டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர கால்வாய் தூணில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 30 பெண்கள் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மீஞ்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீஞ்சூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: