ஊத்துக்கோட்டை,மார்ச் 25-
ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பையில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை வட்டாட்சியர் விஜயலட்சுமி வருவாய்த் துறை ஊழியர்களுடன் சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அதிகாரிகளை கண்டவுடன் மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய ஜேசிபி எந்திரம் மற்றும் டிராக்டரை வட்டாட்சியர் பறிமுதல் செய்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: