ஜம்மு, மார்ச் 24-
எல்லாக் கோயில்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டுமென்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கலந்து கொண்டார். ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் இருந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளனர். பி.டி.பி.-பா.ஜ.க. முதலில் ஆட்சி அமைக்கட்டும். அதன் பிறகு ஓராண்டு கழித்துத்தான் ஆட்சி குறித்து கருத்து தெரிவிக்க முடியும்.
இன்று சர்வதேச அளவில் பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது. பெல்ஜியத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது. மகளிரும் நமது தேசத்தின் ஒரு பகுதிதான். எனவே அனைத்து கோயில்களிலும் அவர்களை அனுமதிக்க வேண்டும். கணவரை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடி உத்தரப் பிரதேசத்தின் பிருந்தாவனத்தில் ஹோலி பண்டிகையைக் கொண்டாடியுள்ளனர்.
பல ஆண்டுகளாக ஹோலி கொண்டாட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த கணவரை இழந்த பெண்கள் இப்போது அதில் பங்கேற்றுள்ளது மிகவும் நல்ல விஷயம். இதற்காக நாம் பெருமை வேண்டும். இந்தியா சரியான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது அடையாளம்” என்றார்
farooq-abdullah_650x400_61452960507

Leave a Reply

You must be logged in to post a comment.