திருவண்ணாமலை, மார்ச் 24-

திருவண்ணாமலை – கடலாடி பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மோதியதில் 8ம் வகுப்பு மாணவன் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை கடலாடி பகுதியில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8ம் வகுப்பு மாணவன் சிவ சக்தி உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 3 மாணவர்கள்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வாகன ஓட்டுநரை சிறை பிடித்து அப்பகுதி மக்கள் தாக்கி உள்ளனர். மேம் வாகன ஓட்டுனரை கைது செய்யக் கோரி  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: