திருவண்ணாமலை மார்ச் 24-

மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க. புதன் அன்று தொகுதி உடன்பாடு கொண்டது. இதைத்தொடரந்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. மற்றும் மக்கள் நலக் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதேப்போல் ஆரணியில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பாபுமுருகவேல் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது  காந்திரோடு, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இனிப்பு வழங்கி சென்றனர். இந்நிலையில் வியாழன் அன்று  தே.மு.தி.க. மற்றும் மக்கள் நலக் கூட்டணியினர் 100 க்கும் மேற்பட்டோர் மீது தேர்தல் விதியை மீறியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: