ஐதாரபாத், மார்ச் 24-option2
ரோகி வெமுலா தற்கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரிப் போராடி வரும் ஐதராபாத் மாணவர்கள் மீது தெலுங்கான காவல்துறை கொடூரமான தடியடி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து மாணவர்களின் ஒற்றுமையைச் சீர் குலைக்கும் வகையில், மாணவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்துக் கடும் அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலையை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஐதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோகி வெமுலா. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் இணைந்து மத்திய அரசின் தவறான கொள்கைக்கு எதிராகப் போராடி வந்தார்.
ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பாஜகவின் ஏபிவிபி மாணவர் அமைப்பின் தூண்டுதலின் பெயரில் தலித் மாணவர்களை ஒடுக்கும் நடவடிக்கை அரங்கேற்றப்பட்டு வருகிறது. தலித் மட்டுமின்றி முற்போக்கு கருத்துகளை உடைய மாணவர்களையும் பாஜக அரசு திட்டமிட்டுக் கல்வியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஏபிவிபி தூண்டுதலின் பேரில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ருமிதி இராணி,

அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் இணைந்து மத்திய அரசின் தவறான கொள்கைக்கு எதிராகப் போராடி வந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி, ரோகி வெமுலா உள்ளிட்ட மாணவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியது. மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு நிர்ப்பந்தம் அளித்துத் துணைவேந்தர் அப்பாராவ் மூலமாக மாணவர் ரோகி வெமுலா-வை தற்காலிக நீக்கம் செய்தததோடு, கல்வி உதவி தொகையையும் நிறுத்தினார். மேலும், அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 5 மாணவர்களையும் விடுதியில் இருந்து வெளியேற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 14 மாணவர் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தி வந்தன.இந்நிலையில், ஜன.18 அன்று மாணவர் ரோகி வெமுலா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணைவேந்தர் பி.அப்பாராவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்துத் துணைவேந்தர் அப்பாராவ் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் கோரினார். ஆனால் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் துணைவேந்தர் பல்கலையில் இருந்து நீண்ட நாள் விடுப்பில் சென்றார்.

இந்நிலையில் இன்னும் ரோகித்வெமுலா தற்கொலை வழக்கு முடிவடையாத நிலையில் மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்ற மார்ச் 22 அன்று பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். அதற்கு அங்கிருந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் துணைவேந்தரைக் கைது செய்க. பணிசெய்ய அனுமதித்தால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சாட்சிகளைக் கலைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் பல்கலைக்கழகத்தின் அமைதி கேடும் என முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

கொடூரதாக்குதல்
இந்நிலையில் மாலை 5 மணியளவில் அங்குக் குவிந்த சிறப்பு காவல் படையினர் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது கடுமையான தடியடி தாக்குதலைத் தொடுத்தனர். மேலும் மாணவிகளையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. பலருக்குத் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் பலரும் நிலைகுலைந்தனர். மேலும் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் வெங்கடேசவுகான் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 27 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் 36 மணி நேரம் கழித்து அதவாது மார்ச் 23ம் தேதி நள்ளிரவு சிறையில் அடைத்தனர். கைது செய்யப்படு போது வழங்கப்படும் சட்டரீதியான உதவிக் கூட மறுக்கப்பட்டது.

மனித உரிமை மீறல்
இதற்கிடையில் மாணவர்களுக்கு விடுதிகளில் அளித்து வந்த உணவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தண்ணீர் மறுக்கப்பட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இது போன்ற நடவடிக்கைகளால் மத்திய மாநில அரசுகள் இணைந்த செயல்பட்டன. அதாவது அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்த நிலையில் விடுதிகளையும் இழுத்து மூடினர். இதற்கிடையில் எல்லை பாதுகாப்பு படை போன்று பல்கலைக்கழக எல்லையைச் சுற்றி அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டு மாணவர்கள் மிரட்டப்பட்டனர்.
இதையடுத்து இந்த மிரட்டல்களுக்கு அடிபணியாத மாணவர்கள் திறந்த வெளியில் தங்கி உணவுகளையும் சமைத்துச் சாப்பிடத் துவங்கினர். அதைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத காவல்துறையினர் சமைத்துக்கொண்டிருந்த மாணவர்களையும் தாக்கத் தொடங்கினனர். அப்படித் தாக்கியதில் உதய் பானு என்ற தெலுங்கு மாணவர் நிலைகுலைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

போராட்டத்திற்கு ஆதரவு
இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து கூட்டு நடவடிக்கை குழு என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் களம் இறங்கினர். மாணவர்கள் மீதான கண்மூடித்தனமாகத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த பல்வேறு அமைப்பினர் அரசிற்கெதிராகப் போராட்டத்தில் குதிக்கத் துவங்கியிருக்கின்றனர். மேலும் துணைவேந்தருக்கு எதிரான போராட்டம் தற்போது தெலுங்கானா போலீஸுக்கும். சந்திரசேகரராவ் அரசிற்கு எதிரான போராட்டமாகவும் உருமாறியிருக்கிறது. துணைவேந்தருக்கு ஆதரவாக மாணவர்கள் மீது தடியடி நடத்த ஆணையிட்டது யார் என்பது தெரிய வேண்டும், சந்திரசேகர ராவ் அரசு தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாநிலம் முழுவதும் ஆர்வம் காட்டி வருவதன் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கையும் இருக்கிறது. ஆகவே இந்த அரசிடம் இருந்து நியாயத்தை எதிர்ப்பாக்க முடியாது. அதற்கு மாறாக மக்கள் மற்றும் மாணவர் சக்தி நீதியைப் பெற்றுத் தரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

பின்வாங்கும் அரசு
இதற்கிடையே மாநிலம் முழுவதும் அரசின் நடவடிக்கைகளுக்கு எழுந்து வரும் எதிர்ப்பை தொடர்ந்து தற்போது அரசு தனது நடவடிக்கையில் இருந்து பின்வாங்க துவங்கியிருக்கிறது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை தற்போது வழங்க முன்வந்திருக்கிறது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர.

Leave a Reply

You must be logged in to post a comment.