student_protest_hybad_3ஐதராபாத், மார்ச் 22-

மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு காரணமான ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அப்பா ராவ் மீண்டும் பணிக்கு திரும்பியதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி தூண்டுதலின் மத்திய அரசு ஆராய்ச்சி படிப்பு மாணவர் ரோகித்வெமுலா மீது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எடுத்தது. இதனால் கல்விபயிலும் வாய்ப்பு நீதி நெறிகளுக்கு மாறாக ரோகித்வெமுலாவிற்கு முற்றிலும் மறுக்கப்பட்டது. இதையடுத்து ரோகித்விமுலா தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ரோகித்வெமுலாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய அமைச்சர்கள் மற்றும் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் பிரச்சனையை திசை திருப்பும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ரோகித்விமுலா தலித் அல்ல என திசைதிருப்பும் வேலையில் ஈடுபட்டார். அதுவும் எடுபடாத நிலையில் மோடி அரசின் தலித் விரோத போக்கு மீண்டும் அம்பலமானது.
இந்நிலையில் ரோகித்வெமுலா தற்கொலையை தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் தீவிரமான நிலையில், ஐதராபாத் பல்கலையின் துணைவேந்தர் அப்பா ராவ் பொடில் திடீரென நீண்ட நாள் விடுப்பில் சென்றார். விடுப்பிற்கு பின்னர் இன்று பல்கலைக்கழகம் திரும்பி செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் வெகுண்டெழுந்த மாணவர்கள் துணைவேந்தர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தூண்டிய மத்திய அமைச்சர்கள் மற்றும் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இதனால் மீண்டும் ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.