banned medicines in indiaசென்னை, மார்ச் 22-
நாடு முழுவதும் விக்ஸ் ஆக்க்ஷன் மற்றும் கோரக்ஸ் உள்ளிட்ட 344 மருந்து வகைகளுக்கு மத்திய அரசு கடந்த 10ம் தேதி தடை விதித்து அறிவிக்கை வெளியிட்டது.
மேலும் தடையை மீறி மருந்துகளை விற்பனை செய்பவர்கள மற்றும் இருப்பு வைத்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மருந்து நிறுவன உற்பத்தியாளர்கள், மருந்து விற்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட மருந்து வணிகம் தொடர்புடைய பலரும் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய மருந்து உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சென்னை உயர் நீதி மன்றத்தில் அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து.
இந்த வழக்கு செவ்வாயன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது விக்ஸ் ஆக்க்ஷன் மற்றும் கோரக்ஸ் உள்ளிட்ட 344 மருந்து வகைகளுககு மத்திய அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் எனக் கோரினர். இதற்கு நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் இது குறித்து 3வாரங்களில் உரிய விளக்கம் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மருந்து உற்பத்தியில் ஈடுபட்டிருந்த 344 விற்பனையாளர்கள் மீது வழக்கு விசாரணை நிறைவடையும் வரை நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து உத்தவிட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் ஜூன் 2ம் தேதி நடை பெறும் என்று நீதிபதிகள் எஸ். கே கவுல் மற்றும் சுந்தரேஷ் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
வரையறுக்கப்பட்ட அளவை விட வேதிப் பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதாக கூறி 344 மருந்து வகைகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் தடை விதித்தது. இந்நிலையில் மேலும் தடை விதிக்கப்பட வேண்டிய 1200 மருந்துகளின் பட்டியலை மருந்து கட்டுப்பாட்டு கழகம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: