புதுதில்லி, மார்ச்.21-
இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித்தேர்வில் வெளிநாடுகளில் படித்து வரும் இந்தியர்களில் 77 சதவிகிதம் பேர் தோல்வியை தழுவுகின்றினர் என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள அரசு மருத்து கல்லூரிகளில் சேர்ந்து தரமான மருத்துக கல்வி பயில வேண்டும் என்றால் அதிக மதிப்பெண் கட்டாயம் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில் மருத்துவம் பயில ஆர்வமிருந்தும் போதிய மதிப்பெண்கள் எடுக்காதவர்கள், தங்களிடம் இருக்கும் வசதி வாய்ப்பை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் பயின்று வருகின்றனர். அப்படி வருபவர்களில் சராசரியாக 77 சதவிகிதம் பேர் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித்தேர்வில் தோல்வியையே தழுவுகின்றனர். கடந்த 12 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வு முடிவின் ஆய்வு மூலம் இத்தகவல் தெரிய வந்திருக்கிறது.
அப்படி வருபவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித்தேர்வில் வெற்றிபெற வேண்டும். அப்படி பெற்றி பெறுவர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவராக அங்கீகரிக்கப்படுவார்கள். அப்படி கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மருத்துவ கவுன்சிலின் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களின் விபரம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு தேசிய கல்வி வாரியம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, கடந்த 2004-ம் ஆண்டு 4 சதவீத மாணவர்களே இந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர். அதிகபட்சமாக கடந்த 2005-ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் 2,851 மாணவர்களில் 2,192 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இது 76.8 சதவீத தேர்ச்சி ஆகும்.
2008ம் ஆண்டு 1851 பேர் பங்கேற்ற தகுதி ஆய்வு தேர்வில் 1087 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர், இது 58.7 சதவிகிதமாகும். இதே போல் 2015ம் ஆண்டில் இரண்டு கட்டமாக நடைபெற்ற தகுதி தேர்வில் 10.4 சதகிதமும், 11.4 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றனர்.
இப்படி கடந்த 12 ஆண்டுகளில் இந்திய மருத்துக கவுன்சில் வெளிநாட்டில் படித்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் பதிவு செய்வதற்கான நடத்திய தகுதி தேர்வில் சராசரியாக 33 சதவிதம் மட்டுமே தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்பது தெரிdoctor-bannerய வந்திருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: