muslim man-hanging-tree-jharkhand
ராஞ்சி, மார்ச் 19-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு மாட்டு வியாபாரிகளை இந்துத்துவா கொலை வெறிக்கும்பல் அடித்துத் தூக்கில் தொங்கவிட்டிருக்கும் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மோடி பிரதமராகப் பதவியேற்றத்தில் இருந்து இந்துத்துவா மதவெறியர்கள் இந்துராஷ்ட்ராவை உருவாக்கும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மாட்டிறைச்சிக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் முகமது இக்லாக் என்பவர் வீட்டில் மாட்டிறைச்சி இருப்பதாக இந்துத்துவா வெறியர்கள் புரளிளை கிளப்பினர். அதனைத் தொடர்ந்து கும்பலாகச் சென்ற குழுவினர் இக்லாக்கை அடித்துப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதிலும் இந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும் தங்களுக்கு மத்திய அரசு வழங்கிய விருதுகளைத் திருப்பி அளித்தனர். அதனைத் தொடர்ந்து இந்துத்துவா வெறியர்கள் தங்களது நடவடிக்கையை மட்டுப்படுத்தினர். இருந்த போதிலும் காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவதாகக் கூறி ஏறத்தாழ 5 பேரை இந்துத்துவா கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர்கள் முகமது மஜ்லூம் (35) மற்றும் அசாத் கான் என்ற இப்ராகிம் (15) இருவரும் வெள்ளியன்று 8 எருமை மாடுகளுடன் சந்தைக்குச் சென்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் அடையாளம் தெரியாத இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டுக் கைகள் கட்டப்பட்ட நிலையில் மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கிராம மக்களும் சேர்ந்து சடலத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட காவல்துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியது. இந்த படுகொலைக்கு இந்துத்துவா அமைப்பினரே காரணம் என்று விகாஸ்மோட்சா கட்சியைச் சேர்ந்த பிரகாஷ்ராம் குற்றம் சாட்டி உள்ளார். இச்சம்பவம் ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசிற்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.