திருப்பூர், மார்ச் 18-
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காந்தி தேசிய முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.11ஆண்டுகளுக்குப் பிறகு கச்சா எண்ணெய் பேரல் 35 டாலராகக் குறைந்தபோதும் பெட்ரோல் லிட்டர் ரூ.33க்கு விற்க முடியும். ஆனால் பாதிக்குப் பாதி வரியை உயர்த்தி மக்களுக்கு பலன் கிடைக்காமல் மத்திய அரசு பார்த்துக் கொண்டது. இதற்கு வரும் சட்டமன்றத் தேர்தல் மத்திய அரசுக்கு பதிலளிக்கும். எனவே விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று காந்தி தேசிய முன்னேற்றக் கழகம் தலைவர் கே.எஸ்.பாபுஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: