actress+roja+hospital+
ஐதராபாத், மார்ச்.19-

ஆந்திரச் சட்டசபை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ வான நடிகை ரோஜா கடந்த ஆண்டு,  சட்டசபை கூட்டத் தொடரின்போது முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவதூறாகப் பேசியதாகக் கூறி,ச் சபாநாயகர் சிவபிரசாத் ராவ் ஓராண்டு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து நடிகை ரோஜா ஆந்திர உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆந்திரச் சட்டசபை சபாநாயகர் விதித்த ஓராண்டு நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் நடைபெற்று வரும் ஆந்திர மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க நடிகை ரோஜா வெள்ளியன்று சென்றார். ஆனால் அவரை சபைக்குள் நுழைய விடாமல் சபைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் மீண்டும் இன்று ( சனிக்கிழமை ) சட்டமன்றத்திற்குச் செல்ல ரோஜா முயன்றார். அப்போதும் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ரோஜாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: