யாகூ, கூகுள், பிங் என தேடல் இணையதளங்கள் பல இருந்தாலும் சிறுவர், சிறுமியருக்கான தகவல்களை மட்டும் தேடித்தருவதற்கு இணையதளங்கள் குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. மேற்கூறிய இணையதளங்கள் தேடும் பொருளுக்கேற்ற பொதுவான தகவல்களைத் தரும் விதத்தில் அமைந்திருப்பதால் தவறான இணையதளங்களும் இந்தத் தேடலில் பட்டியலிடப்படுகின்றன.தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு குப்பைகளை ஒதுக்க இணைய அனுபவம் மிக்கவர்களால் மட்டுமே முடியும். இணையதளங்களை வடிகட்டி தரும் மென்பொருள்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும் குழந்தைகளின் தேவையை அறிந்து தகவல்களைத் திரட்டித் தருவது முக்கியமானதாகும்.இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கூகுள் தேடல் தளத்தின் கஸ்டம் சர்ச் எனப்படும் பயனாளர் தேவைக்கேற்ப முடிவுகளை வடிகட்டித் தரும் வசதியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்தான் கிட்டில்.இணைய வெளியில் குவிந்து கிடக்கும் எண்ணற்ற தகவல்களிலிருந்து குழந்தைகளுக்கு தேவையான செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டும் இத்தளம் பிரித்துத் தருகிறது.

மேலும், தவறான சொற்களை உள்ளிடும் போது அவைகள் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்ற அறிவிப்பு காட்டப்படுகிறது. இந்த இணையதளம் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளதால் ஆங்கில மொழி வழித் தேடல் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளுக்கான தேடல் முடிவுகள் முழுமையான நிறைவைத் தரவில்லை. இக்குறைபாடுகள் வரும் காலத்தில் சரிசெய்யப்படும் வாய்ப்புகள் உள்ளது. தவறான வார்த்தைகளை குறிப்பிட்டு புகார் அளிக்கும் வசதியும் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் தேடிய சொற்கள் மற்றும் விபரங்கள் 24 மணி நேரத்திற்கு பிறகு நீக்கப்பட்டு விடுவதாக இத்தளம் உறுதியளிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: