லலித்மோடியை இந்தியா கொண்டுவர உத்தரவு

மும்பை, மார்ச் 1 –

ஐபிஎல் ஊழல் வழக்கில், அதன் முன்னாள் தலைவர் லலித்மோடியை இந்தியாவுக்கு கொண்டுவர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, இப்போட்டிகளின் முன்னாள் ஆணையர் லலித்மோடி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பினார். தற்போது அவர் இங்கிலாந்தில் உள்ளார். லலித்மோடியின் பாஸ்போர்ட்டை இந்தியா முடக்கி வைத்துள்ள நிலையில், இங்கிலாந்து அவரது பிற வெளிநாட்டுப் பயணங்களுக்கு உதவி செய்தால் அதை இந்தியா எதிர்க்காது என்று அண்மையில் வெளியுறவுத்துறை அமைச்சர்சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார்.இதையொட்டி இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளிக்கு, அரசின் முக்கியமான அமைச்சர் ஒருவரே உடந்தையாக இருப்பதா? என்று கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், லலித்மோடி மீதான வழக்கு, மும்பை உயர்நீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லலித்மோடியை இந்தியா கொண்டு வந்துவிசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

(பிடிஐ)

Leave a Reply

You must be logged in to post a comment.