இயற்கை வேளாண் முதல் ஆன்-லைன் சந்தை வரை :
விவசாயிகளுக்கு 13 அறிவிப்புகள்

விவசாயிகளுக்கு 13 அறிவிப்புகள்

வேளாண் துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யப்படும்.

டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் பிறந்த நாளன்று ஒருமைப்படுத்தப்பட்ட வேளாண் மின்னணு மேடை சந்தைப்படுத்துதல் அமைப்பு துவக்கி வைக்கப்படும்.

வேளாண் சந்தைகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.

வேளாண் பொருட்களுக்கான ஆன்-லைன் சந்தை அம்பேத்கர் பிறந்தநாளில் தொடங்கப்படும்.

பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட் டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.

89 நீர்ப்பாசன திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும்.

மழை வளம் நிறைந்த பகுதிகளில் இயற்கை வேளாண் முறையில் மகசூலை பெருக்க இரண்டு திட்டங்கள் அறிமுகம்.

இயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்க ரூ.412 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன திட்டங்களுக்காக நபார்டு வங்கியில் பிரத்யேகமாக ரூ.20,000 கோடி முதலீட்டில் நீர்ப்பாசன நிதியம் உருவாக்கப்படும்.

பிரதான் மந்திரி கிருஷி சிச்சாய் யோஜனாவின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்படும்.n கால்நடை நலன் பேண 4 பிரத்யேக திட்டங்கள்.

விவசாயிகள் வருமானத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப் பாக்க இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு.

 

ஆதாருக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்

“ஆதார் திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி அரசு மக்களுக்கு வழங்கும் மானியங்கள் நேரடியாக சென்றடையுமாறு சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதன் மூலம் மேற்கொள்ளப்படும்.இதுவரை 98 கோடி ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 26 லட்சம் பயோ-மெட்ரிக் மற்றும் 1.5 லட்சம் இ- கேஒய்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2010-ம் ஆண்டு தேசிய அடையாள ஆணைய மசோதா மாநிலங்களவையில் இன்னமும் நிலுவையில் உள்ளது. எனவே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் ஆதாரைப் பயன்படுத்த அதற்கு சட்ட அடித்தளம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசு வழங்கும் அனைத்துப் பயன்கள், மானியங்கள், சேவைகள் அனைத்தும் ஆதார் திட்டத்தின் மூலமே நிறைவேற்றப்பட சட்டம் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

You must be logged in to post a comment.