திருவனந்தபுரம். மார்ச்,1

பிரபல மலையாள rajesh pillai துரித உணவு மற்றும் பெப்சி குளிர்பானத்தை அருந்தியதன் விளைவாகவே உயிரிழந்தாக தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து அவரது நெருங்கிய நண்பர் சுப்பிரமணியன் சுகுமாறன் தெரிவித்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜேஷ் பிள்ளை மது அருந்துபவராகவோ, அதிகம் சிகரெட் பிடிப்பவராகவோ இருந்திருப்பார் என பலரும் எண்ணிய வேளையில், அப்பழக்கங்கள் அவருக்குக் கிடையாது என அவரின் நெருங்கிய நண்பர் சுப்பிரமணியம் சுகுமாறன் தெரிவித்துள்ளார். எதனால் அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். ராஜேஷ் பிள்ளை துரித உணவு மற்றும் பெப்சி குளிர்பானத்தை தொடர்ச்சியாக அதிகமாக அருத்தியதால்தான் இப்பாதிப்பு எனக் குறிப்பிட்டார். மருத்துவமனை சிகிச்சை மற்றும் ஊசி போடுவது குறித்து அச்சம் கொண்டிருந்த அவர் மேற்கண்ட உணவு முறைகளை மேற்கொண்டு வந்ததாக மேலும் கூறினார். பெப்சி அருந்தியதுதான் இப் பாதிப்புக்கு பிரதான காரணம் என மருத்துவர்களும் உறுதி செய்தனர். மேலும் மலையாள திரைப்பட உலகில் பல்வேறு சாதனைகள் புரிய எண்ணியிருந்த அவர் தனது உடல் நிலை சீரடைந்துவிடும் என நம்பிக்கையுடன் இருந்ததாக அவரது நண்பர் மேலும் தெரிவித்தார். ராஜேஷ் பிள்ளையின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு மலையாளத் திரைப்பட உலகமே ஆறுதுல் வார்த்தைகளை கூறி அஞ்சலி செலுத்தியுள்ளது. பெப்சி மற்றும் துரித உணவுப் பழக்கம் ஒரு மாபெரும் கலைஞனின் உயிருக்கே உலைவைத்து விட்டது என்பது மிகவும் வருத்தத்திற்குறியது. பெப்சிக்கு வாக்காலத்து வாங்கி விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கும் இதுஒரு பாடம்.

Leave a Reply

You must be logged in to post a comment.