நாமக்கல், பிப். 29-
குமாரபாளையம் புதிய வருவாய் வட்டம் சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டு அதனைதமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் துவக்கி வைத்தார். குமாரபாளையம் நகராட்சி, பள்ளிபாளையம் சாலை அருகில் அமைந்துள்ள அண்ணா சமுதாயக்கூடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இப்புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி அலுவலகப் பணிகளை துவக்கி வைத்தார்.
புதிய குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள், வருவாய் உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் பதிவறை, எழுத்தர், அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர், வட்டத்துணை ஆய்வாளர், வட்ட சார் ஆய்வாளர், குறுவட்ட அளவர்கள், முதுநிலை வரைவர், புல உதவியாளர்கள், கணினி பதிவாளர் எனமொத்தம் 31 பணியிடங்களும், சமூக பாதுகாப்புத் திட்டத்தில் தனி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 7 பணியிடங்களும் என மொத்தம் 38 பணிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.