புதுதில்லி, பிப்.25-
நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா? அல்லது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா? என இந்தியாக் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
புதுதில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் ஆடிய 3 வழக்கறிஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும், டெல்லி காவல் துறையின் பொறுப்பின்மை மற்றும் இயலாமைக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது.
புதிய நெறி முறைகள் வகுக்கப்பட்டு அதனை டெல்லி காவல்துறைக்கு மத்திய அரசு அளித்துள்ளதா? முறையைக் கட்டவிழ்த்து விட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன் எனவும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி வினவியுள்ளது.

Leave A Reply