புதுச்சேரி, பிப். 24-

புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளிலும் புதுவை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நூலகம் 24 மணி நேரம் செயல்பட வேண்டும். பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சமூக அறிவியல் துறை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக் கழக நுழைவு வாயிலில் மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பதற்கு பல்கலைகழக நிர்வாகம் முன்வரவில்லை. இதனால், புதன்கிழமையும் மாணவர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் மாணவர் பேரவை நிர்வாகிகள் லிங்கேஸ்வரன், ஜிஸ்னு, அஞ்சலி உள்ளிட்ட நிர்வாகிகளை நேரில் அழைத்த துணை வேந்தர் பேச்சுவார்த்தை நடத்தியதினர்.

சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் தற்காலிமாக கைவிடப்பட்டுள்ளது.புதுச்சேரி பல்கலைகழகத்தில் மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து இந்திராகாந்தி கலைக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி, ராஜீவ் காந்தி கல்லூரி, பாரதி தாசன் மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி மாணவ அமைப்புகளும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் முன்னின்று போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: