காத்மாண்டு, பிப். 24 –

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பொகாரா ஒரு பொழுதுபோக்கு நகரமாகும். அங்கிருந்து வடக்கில் அமைந்திருக்கிறது ஜோம்ஸோம் நகர். இமயமலையில் மலையேற்றத்தில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் ஜோம்ஸோமிலிருந்துதான் தங்கள் பயணத்தைத் துவங்குவார்கள். இந்த இரு நகரங்களுக்கும் இடையில் விமானம் இறங்குவதற்கு வேறு இடங்கள் ஏதும் இல்லை. இந்நிலையில், போக்காராவில் இருந்து ஜாம்சான் நகருக்கு புறப்பட்டுச் சென்ற ‘தாரா ஏர்’ என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ட்வின் ஆட்டர்’ எனப்படும் சிறியரக விமானம், உள்ளூர் நேரப்படி காலை 7.55 மணிக்குப் புறப்பட்டுள்ளது. அடுத்த 20 நிமிடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த அந்த விமானம் காணாமல் போனது.

விமானத்தில் இரண்டு வெளிநாட்டினர் இரு குழந்தைகள் உள்பட மொத்தம் 20 பயணிகளும், விமானி உள்பட 23 பேரும் இருந்தனர்.ஹெலிகாப்டர் மூலம் விமானத்தைத் தேடும் பணி தொடங்கியது. காணாமல் போன விமானம் புதியதுஎன்றும் வானிலையும் நன்றாக இருந்த நிலையில், அது காணாமல் போனது ஆச்சரியம் அளிப்பதாக நேபாள உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் ஜெனரல் சஞ்சீவ் கௌதம் தெரிவித்தார். தேடுதலில், அந்த விமானம் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டது. மேலும், இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 23 பேரும் உயிரிழந்ததும்தெரியவந்தது.

Leave A Reply

%d bloggers like this: