indian-railway_350_020315033408மத்தியில் ஆளும் பாஜக அரசின் இரண்டாவது பட்ஜெட் வரும் பிப்ர வரி29 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ரயில்வே பட்ஜெட்இன்று (பிப்ரவரி 25) தாக்கல் செய்யப்படும்.ரயில்வே பட்ஜெட்டின் தோற்றம்ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் தயாரிக்கும் பணி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. அது இன்றும் தொடர்கிறது. 1920ம் ஆண்டில் இந்திய இருப்புப்பாதைகளைச் சீரமைக்க வில் லியம் அக்வொர்த் என்பவரின் தலைமை யில் 10பேர் கொண்ட குழு ஒன்று அமைக் கப்பட்டது. அது ரயில்வேத் துறையின்நிதி விவகாரங்களிலும் பரிந்துரைகளை அளித்திருந்தது. அதன் பரிந்துரைகளின் படி ரயில்வே வரவு-செலவு அரசின் பொது பட்ஜெட்டில் இருந்து பிரிக்கப் பட்டு, இரண்டும் தனித்தனியாக வெளியிடப் பட்டன. இந்த நடைமுறை இன்று வரை பின்பற்றப்பட்ட போதும், இப்போது பொது பட்ஜெட்டின் விவரங்களுக்குள் ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து விட்டார்கள்.

புதிய ரயில் பாதைகள்

கடந்த ஆண்டில் ஒரு புதிய ரயில் கூட அறிவிக்கப்படவில்லை. அந்நிலைமை இந்த ஆண்டும் நீடிக்கக்கூடும். சென்ற பட்ஜெட் மீது உரையாற்றும் போது அமைச்சர் சுரேஷ் பிரபு பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்து அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டார். பயணிகள் எண்ணிக்கை பெருகியது போல் இருப்புப்பாதைகளின் எண்ணிக்கை பெருகவில்லை என்று அவர் அப்போதுகூறினார். ஆனால் புதிய ரயில்பாதை களுக்கான திட்டங்கள் கிடப்பில் போடப் பட்டுள்ளன. அரசு நாம் கூறுவதைக் காதுகொடுத்து கேட்குமா என்ற கேள்வி இருந்த போதும், பின்னர் உங்கள் தேவைகளைக் கூறவில்லை என்று அரசு கூறிவிடக் கூடாது என்பதற்காக நமது தேவைகளை பட்டி யலிடுவது அவசியமாகிறது.கிழக்குக் கடற்கரையில் அமைந் துள்ள துறைமுக நகரங்களை இணைக் கும் வகையில் புதிய ரயில் தடம் நிறுவப் பட வேண்டும்.

குமரியில் தொடங்கி தூத்துக்குடி, இராமேஸ்வரம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை நகரம்வரையிலான இந்தப் பாதை கடலோர மாகவே அமைய வேண்டும். தூத்துக்குடி யில் இருந்து மங்களூர், மும்பை, சென்னை,கொச்சி ஆகிய நகரங்களுக்கு சரக்கு ரயில் பாதை (கசநiபாவ உடிசசனைடிச) நிறுவப்பட வேண்டும். தென் தமிழகத்தில் இருந்து மத்திய தமிழகத்துக்கு(வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஜோ லார்பேட்டை போன்ற நகரங்களுக்கு) நேரடி ரயில் இணைப்புகள் இல்லை. திண்டுக்கல் முதல் சபரிமலை வரையில் புதிய பாதை அமைப்பதற்கான முதல் ஆய்வு முடிந்து விட்ட போதும், அதற்குமீண்டும் ஒரு புதிய ஆய்வு நடத்த ரயில்வேதிட்டமிட்டுள்ளதாக சென்ற பட்ஜெட்டில் கூறப்பட்டது.

அருப்புக்கோட்டை வழி யாக விருதுநகர் உடன் மானாமதுரை இணைக் கப்பட்ட போதும், மதுரையுடன் அருப்புக் கோட்டை இணைக்கப்படவில்லை. ஈரோட்டில் இருந்து பழனி செல்வதற்கு புதிய பாதை அறிவிக்கப்பட்டும் திட்டப் பணிகள் தொடங்கவில்லை. காரைக்குடி-பட்டுக்கோட்டை-அறந்தாங்கி வழியாக திருவாரூருக்கு புதிய பாதை அமைக்கப்பட வேண்டும். சுமை அதிகமாக இருக்கிறது என்று ரயில்வே பலமுறை கூறி வரும் மதுரை-திண்டுக்கல்-திருச்சி வழிக்கு மாற்றாக மதுரை, மேலூர், திருப்பத்தூர், காரைக்குடி வழியாக ஒரு புதிய பாதை அமைக்கப்பட வேண்டும்.

ரயில் இல்லாத மாவட்டம்

தமிழகத்தில் ரயில் இல்லாத மாவட்ட மாக தற்போது தேனி மாவட்டம் மட்டுமே உள்ளது. அம்மாவட்டத்தில் 1928 முதல் செயல்பட்டு வந்த மதுரை-போடி மீட்டர்கேஜ் ரயில் பாதையில் 2010 டிசம்பர் இறுதிவரை ரயில் ஓடியது.இப்பாதையில் புதிய அகல ரயில் பாதை அமைக்கப்படும் என்றுரயில்வே அறிவித்தது. அதற்கான ஆய்வுபணிகளும் நடத்தப்பட்டு ரூ.280கோடி யில் திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. தொடக்கத்தில்ரூ.17 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர் தலைமையில் நடந்த போராட் டத்துக்குப் பின் மேலும் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது.

தற்போது இதன் மதிப் பீடு ரூ.300 கோடியைத் தாண்டி விட்டது.இத்திட்டத்தை துரிதமாக முடிக்க போது மான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்அகலப்பாதை மாற்றத்துக்கு முன்ன தாக கொல்லத்தில் இருந்து நாகூர் மற்றும் சென்னைக்கு பயணிகள் ரயில் இருந்தன. இவை மீண்டும் தென்காசியில் இருந்து விடப்பட வேண்டும். விருதுநகர் – புனலூர்அகலப்பாதை மாற்றம் செங்கோட்டை வரை முடிந்துள்ளது. செங்கோட்டை வரைபணிகள் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் செங்கோட்டை-புனலூர் பாதை முடி வடையாததால் இப்பாதை வழியாக கேர ளாவுக்குள் செல்ல முடியவில்லை. பணி கள் முடிவடையும் வரை நாகூர், சென் னைக்கு ரயில்கள் செங்கோட்டையில் இருந்து இயக்கப்பட வேண்டும்.

முடக்கப்பட்டுள்ள திட்டங்கள்

சென்னை-கடற்கரை-கொருக்குப் பேட்டை மூன்றாவது பாதை, பேசின் பிரிட்ஜ்-சென்ட்ரல் நிலையம் 5, 6வதுபாதை, அத்திப்பட்டு-புத்தூர் 83கி.மீ.புதியபாதை, கடற்கரை-அத்திப்பட்டு 4வது பாதை ஆகிய திட்டங்கள் தொடங்கப் பட்டு இடையில் கைவிடப்பட் டன.கும்பகோணம்-திருவாரூர், ஈரோடு-பழனி, ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி, அருப்புக்கோட்டை-மதுரை, பெங்களூரு-சத்தியமங்கலம், திண்டிவனம்-திரு வண்ணாமலை,மாமல்லபுரம் வழியாக கடலூர்-திண்டிவனம்,மதுரை-போடி ஆகி யவை 1996-97, 1998-99 பட்ஜெட்டு களில் அறிவிக்கப்பட்டு, மதிப்பீடு, முதல்கட்ட ஆய்வுகள் செய்யப்பட்ட பின்னும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.திண்டுக்கல்-பாலக்காடு மற்றும்கோவை அகலப்பாதை மாற்றங்களில் திண்டுக்கல்-பாலக்காடு அகலரயில் பாதை முடிவடைந்த போதும், பொள் ளாச்சி-போத்தனூர் அகல ரயில் பாதை மாற்றம் முடிவடையவில்லை.

2007ம் ஆண்டு முதல் மூடப்பட்ட 49கி.மீ. பாதைக்கு இன்னும் விடிவுகாலம் வர வில்லை. இதனால் கோவை செல்வதற்கு மதுரை-ஈரோடு வழித்தடத்தை பயன் படுத்த வேண்டியுள்ளது. இது தூரமும், செலவும் கூடுதலான வழியாகும்.

இரட்டைப்பாதை

சென்னை-கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள 738கி.மீ. இருப்புப் பாதை முற்றிலுமாக மின்மயமாக்கப்பட்டு விட்டது. ஆனால் இரட்டைப்பாதை முழுமையாகக் கிடையாது. தென்னிந்தியா வின் மிகப்பெரிய முக்கிய இருப்புப்பாதை கவனிப்பாரற்று கிடக்கிறது.சென்னை-செங்கல்பட்டு, திண்டுக்கல்-மதுரை இரட் டைப்பாதை பயன்பாட்டில் உள்ளது.செங்கல்பட்டு-விழுப்புரம் இரட்டைப் பாதை பணிகள் 90விழுக்காடு முடிவ டைந்து விட்டது. சிக்னல் பணிகள் மீதம் உள்ளன. விழுப்புரம்-திண்டுக்கல் இரட் டைப்பாதை பணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிந்துள்ளன. திருச்சி- மணப்பாறை(37கி.மீ.)விருத்தாச் சலம்-திருவெண்ணெய் நல்லூர் (39கி.மீ.), விழுப்புரம்-அரியலூர்(50கி.மீ.) ஆகிய பகுதிகளில் பணிகள் முடிந்து விட்டன.போதிய நிதி இல்லாததால் மீதப்பணிகள் மந்தமடைந்து உள்ளன.

மற்ற ஆலோசனைகள்

திருச்சி-தூத்துக்குடி, மதுரை-கோயம்புத்தூர் இண்டர் சிட்டி விரைவு ரயில் கள் விட வேண்டும். திருச்சி-நெல்லைஇண்டர்சிட்டி ரயிலை தஞ்சாவூர், நாகர் கோயில் வரை நீட்டிக்க வேண்டும். கன்னி யாகுமரி-நிஜாமுதீன் விரைவு ரயிலை தினசரி வண்டியாக மாற்ற வேண்டும். மயிலாடுதுறை-நெல்லை சாதாரண ரயிலை காரைக்கால்-திருச்செந்தூர் வண்டி யாக மாற்ற வேண்டும். கன்னியாகுமரி-இராமேஸ்வரம் ரயிலை தினசரி ஓட்டவேண்டும். இராமேஸ்வரம்-செங்கோட் டை, இராமேஸ்வரம்-ஈரோடு தடங்களில் ரயில்கள் விடப்படும் என்ற அறிவிப்பு 2007ல் வெளியானது.

ஆனால் அது இந் நாள் வரை வெளிச்சத்தைக் காண வில்லை. கன்னியாகுமரி-புதுச்சேரி ரயில்மானாமதுரை, அருப்புக்கோட்டை வழி யாக வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது. நாகர்கோவில் – நாகூர் தடத்தில் புதிய ரயில்இயக்கப்பட வேண்டும். மதுரை-திருப்பதிரயில் நாள்தோறும் இயக்கப்பட வேண்டும்.தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இங்கு எழுதி விட முடி யாது. அதற்குரிய பணமும் ரயில்வேத் துறையும் கிடையாது. மக்களின் தேவையை ஈடு செய்ய தேவையான முத லீட்டை தனியார்கள்தான் போட முடியும் என்று ரயில்வே கூறிவிடக்கூடாது என்ப தால் மேலே கூறப்பட்ட சிறிய கோரிக்கை களையாவது இந்த ரயில்வே பட்ஜெட் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புவோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.