அர்ஜென்டினா தொழிலாளர் போராட்டம் தீவிargentinaரம்

ரியோ, பிப்.25-

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில்  மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டித்து போரட்டங்களைத் தொடங்கி உள்ளனர்.

ஆசிரியர்களும் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட 32 சதவீத ஊதிய உயர்வு மேலும் தாமதமானால் போராட்டம் போவதாக அறிவித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைப்பேன் என்ற வாக்குறுதியுடன் 2015 டிசம்பரில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற மேக்ரி, சீரமைப்பி என்ற பெயரில் உழைக்கும் மக்களின் தலையில் கைவைக்க துவங்கியுள்ளார்.

இதுவரை 6200 பேர் மட்டுமே வேலையை விட்டு அனுப்பட்டதாக அரசு தரப்பி வரும் 21000 பேர் வேலை இழந்துள்ளதாக தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிடில் போராட்டங்கள் மேலும் திவிரப்படுத்தப்படும் என தொழிற்சங்கத் தலைவரான ஹியூகோ கோடோய் எச்சரித்துள்ளார்.

 

Leave A Reply

%d bloggers like this: