ஈட்டா நகர், பிப்.25-arunachal-pul-480

அருணாசலம் பிரதேசம் குதிரைப் பேரம் மூலம்  நம்பிக்கை வாக்கெடுப்பில் கலிகோபுல் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் அதிருப்தியாளர்களைக் கொண்டு பாஜக ஆதரவில் முதலமைச்சராகப் பதவியேற்ற கலிகோபுல் இன்று (  வியாழனன்று ) சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார்.  இந்த வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே ஏற்கனவே நடைபெற்ற குதிரை பேரத்தில் வந்த உறுப்பினர்களை விட மேலும்  8 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வியாழனன்று நடைபெற்ற குதிரை பேரத்தில் படிந்திருந்தார்கள். இந்நிலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 58 எம்எல்ஏகளில் 40 எம்எல்ஏகளின் ஆதரவை பெற்று வெற்றிபெற்றிருக்கிறார்.  இதன் மூலம் ஜனநாயகத்தை பணநாயகமாக பாஜக உள்ளிட்ட கட்சியினர் திட்டமிட்டு மாற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: