தமிழகத்தில் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து அநாகரீகமாகப் பேசுவதும், கொலை மிரட்டல் விடுவதும் வாடிக்கையாகி விட்டது.இந்த அநாகரீகத்திற்கு அங்கீகாரம் அளிப்பது போல், தமிழக காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை சீர்குலைக்கும் சதிச் செயலில் ஈடுபட்டு வரும் பஜ்ரங்தள் கும்பலுக்கு எதிராகப் போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜாவின் மகளை சுட்டுக் கொல்ல வேண்டும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நாத்துடுக்குடன் எச்.ராஜா பேசியுள்ளார்.காவிக்கும்பலின் கலவரத் திட்டத்திற்கு எதிராக போராடினாலோ, கருத்து தெரிவித்தாலோ தேசத் துரோகம் என முத்திரை குத்தி இழிவான அரசியலில் தொடர்ந்து பாஜக ஈடுபட்டு வருகிறது.

ஏதோ தேச பக்தியின் ஒட்டுமொத்த குத்தகைதாரர் போன்று செயல்படும் இவர்களின் யோக்கியதையை நாடறி யும். இந்திய விடுதலை போராட்டத்தில் இந்த இந்துத் துவா கும்பல் எள்முனை அளவு கூட பங்கேற்கவில்லை. அது மட்டுமல்ல சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இவர்கள். இந்த கும்பல் மதத் தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தியதை வரலாற் றின் பக்கங்களில் இருந்து அழித்திட முடியாது.ஆனால் இந்த தேசத்தின் ஒற்றுமைக்காக கம்யூனிஸ்ட்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள் என்பதை வரலாறு சொல்லும். பஞ்சா பில் பிரிவினைவாத பிந்தரன்வாலா கோஷ்டியை தொடக்கம் முதல் இறுதிவரை எதிர்த்தவர்கள் கம்யூ னிஸ்டுகள்தாம் என்பதை நாடறியும். இன்றும் காஷ் மீரில் பிரிவினைவாதிகளை எதிர்த்து சமரசமின்றி கம்யூனிஸ்ட்டுகள் போராடி வருகிறார்கள்.ஆனால் பஞ்சாபிலும் காஷ்மீரிலும் பிரிவினை வாதிகளை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளோடு பதவி சுகத்திற்காக உறவு வைத்திருக்கும் கட்சிபாஜகதான்.

பாபர் மசூதியை இடித்து இந்திய மக் களின் மனங்களை மதரீதியாகப் பிளக்க முயன்றதும் பாஜகதான். அந்தக் கட்சியின் தலைவருக்கு தேச ஒருமைப்பாடு பற்றி கம்யூனிஸ்ட்களுக்கு உபதேசம் செய்ய எந்த யோக்கியதையும் கிடையாது.மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்வெங்கய்ய நாயுடு ’’ எச்.ராஜாவின் கருத்துக்கும் பாரதீய ஜனதாவிற்கும் தொடர்பில்லை என்றும், இது போன்ற கருத்து சொல்ல யாருக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளார். அனுமதியில்லை என்றால் ராஜா மீது எடுத்த நடவடிக்கை என்ன? இந்தநாடகத்தையும் மக்கள் நம்பிவிடுவார்கள் என பாஜகபகல்கனவு காண்கிறது. தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடு என பாடிய கோவன் மீது உடனே வழக்கு பாய்ந் தது.

ஆனால் பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கும் எச்.ராஜாவுக்கு தமிழக காவல்துறை சல்யூட் அடித்து பாதுகாப்பு கொடுக்கிறது. இதுதான் சட்டத்தின் ஆட்சி நடக்கும் லட்சணம். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேர வைத் தலைவர் கன்னய்ய குமாரோ, உடனிருந்த மாணவர்களோ பிரிவினை கோஷங்களை எழுப்ப வில்லை. அதைச் செய்தது பாஜக மாணவர் பிரிவுஏபிவிபிதான் எனும்உண்மை வெளிவந்திருக்கிறது.அதே போல் ஜீநியூஸ் சேனலில் ஒளிபரப்பான வீடி யோ போலியானதுஎன்பதும் அம்பலமாகியிருக் கிறது. இவர்கள் மீது மோடி அரசு இதுவரை நடவ டிக்கை எடுக்காதது ஏன்? இதன் மூலம் மீண்டும்பாஜகவின் தேசபக்தி சந்தி சிரிக்கிறது. கம்யூ னிஸ்ட்கள் மீது தேசவிரோத முத்திரை குத்தி முடக்கிவிடலாம் என சங்பரிவார் கும்பல் நினைக்கும் என்றால் இதைவிட மூடத்தனம் வேறொன்றும் இருக்க முடியாது.

Leave a Reply

You must be logged in to post a comment.