ரயில் (பட்ஜெட்):

ரயில் (பட்ஜெட்)வரும் பிப்ரவரி 25ம் தேதி மக்களவையில் ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். ரயில்வே பட்ஜெட் என்றாலே கட்டண உயர்வு, புதிய ரயில்கள், அவரவர் ஊருக்கேற்ற ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய பொதுவான எதிர்பார்ப்பையே நாம் பார்ப்பது வழக்கம். ரயில்வே பட் ஜெட்டை முழுமையாக பார்க்க வேண் டும். ரயில்வே பட்ஜெட்டில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளடங்கி இருக்கும். ஒன்று அதன் அன்றாட வரவு, செலவு, மிச்சம் பற்றியது. இன்னொன்று ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலீடு செய்வது பற்றியது. இப்போது நடப்பாண்டு 2015-16ம் ஆண்டாகும். இதற்கான பட்ஜெட் 2015 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பட்ஜெட்டில் 2013-14ம் ஆண்டின் சரி செய்யப்பட்ட வரவு-செலவு-மிச்சம் பற்றிய இறுதிக் கணக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. 2013-14ல் ரயில்வேயின் பயணக் கட்டணம் சரக்குக் கட்டணம் வசூலித்தவகையில் கிடைத்த மொத்த போக்கு வரத்து வரவு ரூ.1.39 லட்சம் கோடியாகும்.இத்துடன் பல்வகை வரவு ரூ.3,655 கோடி சேர்ந்து ரூ.1.43 லட்சம் கோடியா கும். இதில் அன்றாட நடை முறை செலவுரூ.97,570 கோடியாகும். இத்துடன் தேய் மான நிதிக்கு ஒதுக்கியது ரூ.7,900 கோடி.ஓய்வூதிய நிதிக்கு ஒதுக்கியது ரூ.24,850 கோடி. வேறு வகை செலவு ரூ.1,144 கோடியாகும். ஆக மொத்த செலவு ரூ.1.41 லட்சம் கோடியாகும். நிகர வருமானம் ரூ. 11,749 கோடியாகும். இதிலிருந்து மத்திய அர சுக்கு ரயில்வே ரூ.8,008 கோடி லாப பங்கீ டாக கொடுத்தது போக நிகர லாபம் ரூ.3,740 கோடியாகும்.மொத்த வரவு ரூ .100 என்றால் மொத்த செலவு ரூ.93.5 ஆகும். இதை 93.5 செலவு சதவீதம் (ஆப ரேட்டிங் ரேசியோ) என்கிறோம்.2014-15 ஆம் ஆண்டுக்கான இறுதிக் கணக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில்தான் தெரிய வரும். ஆனால் அதன் பட்ஜெட் மறுமதிப்பீடு என்னவென்று 2015-16 பட்ஜெட்டிலேயே சொல்லப்பட்டுள்ளது. அதன்படி மொத்த வரவு ரூ.1.64 லட்சம் கோடியாகும். மொத்த செலவு ரூ.1.49 லட்சம் கோடியாகும். செலவு சதவீதம் 92.5 ஆகும். நிகர வருமானம் ரூ.15,198 கோடி யாகும். இதிலிருந்து மத்திய அரசுக்கு ரூ.9,135 கோடி லாப பங்கீடாக கொடுக்கப் பட்டுள்ளது. நிகர லாபம் ரூ .6,053 கோடி யாகும்.நடப்பு நிதி ஆண்டு 2015-16 ஆகும். இதற்கான பட்ஜெட் மதிப்பீடு வெளி யிடப்பட்டுள்ளது. அதன்படி எதிர்பார்க்கப் பட்ட மொத்த வரவு ரூ.1.88 லட்சம் கோடி யாகும். மொத்த செலவு ரூ .1.63 லட்சம் கோடியாகும்.

செலவு சதவீதம் 88.5 என்றுஎதிர்பார்க்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப் பட்ட நிகர வருமானம் ரூ.25,076 கோடியா கும். இதில் லாபப் பங்கீடாக மத்திய அர சுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது ரூ.10,810 கோடியாகும். எனவே நிகர லாபம் ரூ.14,265 கோடியாகும். இந்த நிகரலாபம்தான் ரயில்வே திரட்டும் நிதியாகும். இதனை அகநிதியாக்கம் எனலாம் (இன்டெர்னல் ரிசோர்ஸ் ஜெனரேசன்).நடப்பு நிதியாண்டான 2015-16ல் சரக்கு போக்குவரத்தும் பயணிப் போக்குவரத்தும், சென்ற ஆண்டைவிட கூடுத லாக எவ்வளவு வரும் என்று எதிர்பார்த்தோ மானால், அந்தளவு கூடுதல் வருமானம் வரவில்லை. எதிர்பார்த்த வரவில் ரூ.5,000 கோடி குறையும் என்று ரயில் வேத் துறை எதிர்பார்க்கிறது. எனவே அந்தளவு அன்றாடச் செலவை (4.2 சதம்) வெட்டு வதற்கு நவம்பரிலேயே நாட்டில் உள்ளஅனைத்து ரயில்வே நிர்வாகங்களுக் கும், ரயில்வே வாரியம் அறிவுரை வழங்கி விட்டது! காலிப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆணைக்குக் காத்திருப்பவர்களை அந்த இடங்களில் நியமிப்பதைக் கூட தள்ளி வைக்கச் சொல்லியுள்ளது வாரியம்! வரவு குறைவதால் செலவையும் குறைத்து, செலவு சதவீதத்தை 88.5 என்று ஜோடித்துக் காட்டும் ஏற்பாடாகும் இது.எப்படிப் பார்த்தாலும் ரயில்வேயின் அன் றாட வரவு செலவில் லாபம்தான் உள்ளது என்பதை அறியலாம். ஆனால் நட்டம் நட் டம் என்கிறார்களே, அது என்ன? ரயில்வே100 வண்டிகளை ஓட்டினால், அதில் 65வண்டிகள் பயணி வண்டிகள். 35 வண்டி கள்தான் சரக்கு வண்டிகள். ஆனால் வரு மானம் ரூ.100 என்றால் அதில் பயணிகள் வண்டிகளின் மூலமான வரவு 35 சதவீதம் தான். சரக்குப் போக்குவரத்து வரவு தான் 65 சதவீதம். பயணிகள் போக்கு வரத்தில், புறநகர சேவையில் ரூ.4,500 கோடி, கிளை தடங்களில் ரூ.1,500 கோடி,அத்தியாவசியப் பண்டங்களை குறை வான கட்டணத்தில் ஏற்றிச் செல்வதால் ரூ.90 கோடி என, இவை உட்பட சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுகிற வகை யில் ரயில்வேக்கு 2013-14ல் ஏற்பட்டநிகர இழப்பு ரூ.21,000 கோடியாகும். இத்த கைய இழப்பை ஈடு செய்ய அமெரிக்கா, சீனா உட்பட மற்ற நாடுகளின் மத்திய அரசுகள் அவற்றின் ரயில்வேக்களுக்கு மானியம் அளிக்கின்றன. இந்தியாவில் சரக்குப் போக்குவரத்து லாபத்தைக் கொண்டு இது ஈடு செய்யப்படுகிறது.

இந்த ரூ.21,000 கோடியை, மத்திய அரசு ரயில்வேக்கு கொடுத்துவிட வேண்டும் என்று விவேக் தேவ்ராய் தலைமையிலான குழு உட்பட அனைத்துக் குழுக்களும் பரிந்துரைத்துள்ளன. அப்படிச் செய்தால் ரயில்வேயின் லாபம் இன்னும் கூடும்.இதைச் செய்வதற்கு மாறாக, மோடி அரசின் ரயில்வே அமைச்சகம் கட்டண உயர்வு, அரை டிக்கெட் சலுகை பறிப்பு, தட்கல் கட்டணத்தில் குறைந்த பட்சக் கட்டணம் அதிகரிப்பு, முன்பதிவை ரத்துச்செய்வோரிடமிருந்து பிடித்தம் செய்யும் தொகையை இரட்டிப்பாக்குவது, ‘சுவிதா’ வண்டிகளில் முதியோர் சலுகைகளை ஒழிப்பது, முன் பதிவுக்கான காலத்தை நீட்டிப்பது போன்ற வழிகளில்வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறது. பட்ஜெட்டி லோ சட்ட சபை தேர்தல்களுக்குப் பிறகோ மீண்டும் கட்டண உயர்வு வரலாம். மற்ற நாடுகளைப் போல், ரயில்வேத்துறை தனது லாபப் பங்கீடாக மத்திய அரசுக்கு கொடுப் பதை நிறுத்தினால் அதுவும் ரயில்வேயின்லாபத்தைப் பெருக் கும். ஊழியர்களின் ஓய்வூதியத்திற்குத் தேவையான நிதியை யும் மற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுப்பதைப் போல இந்திய தொகுப்பு நிதி (கன்சாலி டேட்டட் ஃபண்ட் ஆப்இந்தியா) அமைப்பிலிருந்து கொடுத்து விட்டால், அந்தப் பணமும் ரயில்வேயின்லாபம் மேலும் பெருக வழி வகுக்கும்.

ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை யும், ஊதியக் குழு பரிந்துரைப்படியானஊதிய உயர் வையும் ரயில்வேத் துறை தானே கவனித்துக் கொள்ள முடியும்.இதெல்லாம் இல்லாத நிலையில் ரயில்வே தனது சொந்த வருமானத்திலிருந்தே நாட்டின் ரயில் போக்குவரத்து வளர்ச்சிக் குத் தேவை யான முழுத் தொகையை யும் முதலீடு செய்வது சாத்தியமில்லை.

வளர்ச்சித் திட்டங்கள்

பட்ஜெட்டில் இன்னொரு அம்சம்தான் ரயில் வளர்ச்சிச் திட்டங்களில் முதலீடு பற்றியதாகும். நாடு சுதந்திரம் அடைந்த திலிருந்து, மோடி மத்திய ஆட்சிக்கு வரும் வரை, நாம் ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் ரயில் வளர்ச்சியையும் திட்டமிட்டு வந்தோம். 2012 முதல் 2017 வரை 12வது ஐந்தாண்டுத் திட்ட கால மாகும். இந்த 12வது ஐந்தாண்டுத் திட்டத் துக்கு ரூ.7.19 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டும் என்று ரயில்வேத் திட்ட மிட்டது. புதிய தடங்கள், அகலப் பாதை,இரட்டைப் பாதை, தனி சரக்குப் பாதை, மின் சாரமயம், பயணிகள் பெட்டி, எஞ்சின், சரக்குகளுக்கான பெட்டி உற்பத்தி, பாது காப்பை பலப்படுத்துதல், பயணிகள் வசதி கள், ஊழியர் குடியிருப்பு உள்ளிட்ட பல அம்சங்களில் முதலீடு செய்யவே இந்த திட்டம். திட்டக் குழு தன் அறிக்கையில் சரக்குப்போக்குவரத்தில் 30 சதவீதம்தான் ரயில் வேயால் கையாளப்படுகிறது, இதை 50 சத வீதமாக்க வேண்டும் என்கிறது. அத்தோடுகேட்பவர்க்கெல்லாம் இடமளிக்கும் வகை யில் பயணிகள் போக்குவரத்து வளர்க்கப் பட வேண்டும் என்றும் கூறுகிறது.

ஆனால்12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ. 7.19 லட்சம் கோடி என்ற ரயில்வேயின் திட்டத்தை ரூ. 5.19 லட்சமாக வெட்டிக் குறைத்தது. இதற்கான நிதி எங்கிருந்து வரும் என்றும் திட்டமிட்டது.ஐந்தாண்டுகளில் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வீதம் ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு தனது பொது பட்ஜெட் டிலிருந்து ரயில் பட்ஜெட்டுக்கான ஆதர வாகத் தரும். ரயில்வே ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் ரூபாய் ஒரு லட்சம் கோடியை திரட்டும். இந்திய ரயில் நிதிக் கழகம் (ஐஎர்எப்சி) மூலம் ஆண்டுக்கு ரூ.24,000 கோடி வீதம் 5 ஆண்டுகளில் ரூ.1.20 லட்சம் கோடிதிரட்டும்.

தனியார் பங்களிப்பு மூலம் ஆண் டுக்கு ரூ.20,000 கோடி வீதம் ஐந்தாண்டு களில் ரூபாய் ஒரு லட்சம் கோடி வரும் என்று திட்டக் கமிசன் திட்டமிட்டு கொடுத் தது. 2012-13, 2013-14, 2014-15 ஆகிய மூன்றாண்டுகளில் ஆண்டுக்கு ரூ.1.4 லட்சம் கோடி வீதம் ரூ.3.123 லட்சம்கோடி செலவு செய்யப்பட்டிருக்க வேண் டும். ஆனால் ரூ.1.73 லட்சம் கோடிதான் செலவு செய்யப்பட்டது. மத்திய அரசு ரூ.1.2 லட்சம் கோடி கொடுப்பதற்கு பதி லாக ரூ .85ஆயிரம் கோடிதான் கொடுத்தது.

வளர்ச்சியின் (?) நாயகன்

2014ல் மோடி அரசு பதவி ஏற்றவுடன் ரயில் வளர்ச்சி கிடு கிடுவென்று உயரும்என்றும், ரயில்வேக்கு நல்ல காலம் பிறக்கும் என்றும் பல பேர் எதிர்பார்த்தார்கள். 2015-16 பட்ஜெட்டை தாக்கல் செய்த சுரேஷ் பிரபு, 12வது ஐந்தாண்டு திட்டத் தை ஊற்றி மூடிவிட்டார். ஏனென்றால் திட்டக் கமிசனை மத்திய அரசு கலைத்து விட்டது. இவர் புதிய ஐந்தாண்டு திட்ட த்தை அறிவித்தார். 2015 முதல் 2019 வரையிலான ஐந்தாண்டுகளில் ரயில் வளர்ச்சிக்கு என தனது அரசு ரூ.8.56 லட் சம் கோடி முதலீடு செய்யப் போவதாகவும், எந்தெந்த வகையில் அந்தச் செலவு இருக்கும் என்றும் அவர் திட்டத்தை வெளி யிட்டார். எனவே ஆண்டுக்கு ரூ. 1.71 லட் சம் கோடி முதலீடு நடக்கும் என்று நாம்எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அவரது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டான 2015-16க்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்தான் செலவு செய்யப் போவதாக அறிவித்தார்.

எடுத்தவுடனேயே திட்ட மதிப்பீட்டில் ரூ.71 ஆயிரம் கோடி வெட்டு. இந்த ஒரு லட்சம் கோடி எப்படி திரட் டப் படப்போகிறது என்று அவர் பட்ஜெட் டில் அறிவித்தார். மத்திய அரசின் பட்ஜெட்ஆதரவு ரூ.40,000 கோடி வரும். டீசல்மூலம் ரூ.1,645 கோடி வரும். கடன் பத்திரம்வெளியிட்டு ரூ.17,655 கோடி திரட்டப் படும். ரயில்வேயின் அகநிதியாக்கம்மூலம் ரூ.17,793 கோடி திரட்டப்படும். தனியார் பங்களிப்பு மூலம் ரூ.5,781 கோடிவரும். காப்பீடு, ஓய்வூதிய நிதி முதலிய வற்றிலிருந்து திரட்டும் கடன் மூலம்ரூ.17,136 கோடி திரட்ட முடியும் என்று திட்டத்தை அறிவித்தார். ஆனால் மத்திய அரசு தான் தரவேண்டிய ரூ.40,000 கோடிக்கு மாறாக, ரூ 28,000 கோடிதான் கொடுக்க முடியும் என்று கூறி விட்டது. கடன் பத்திரம் மூலம் ரூ.17,655 கோடி இலக்கிற்கு பதிலாக திரட்டியது வெறும் ரூ. 6,000 கோடிதான். ஆக மொத்தம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குப் போடப்பட்ட திட்டத்தில் ரூ.53,000 கோடிதான் திரட்ட முடிந் தது. 47,000 கோடியைத் திரட்ட முடிய வில்லை. எனவே நடப்பு நிதி ஆண்டுக்கு திட்டமிட்ட முதலீட்டில் 53 சதவீதம்தான் செலவு செய்யப்படும். 47 சதவீதம் திட்டச்செலவு வெட்டப்பட்டிருக்கும். 2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் டை பிப்ரவரி 25 அன்று படிக்கிறபோது இந்த உண்மையை அவர் ஏற்றுக் கொண்டிருப்பார் என்று நம்பலாம். ஐந் தாண்டுத் திட்ட மதிப்பீடு ரூ.8.56 லட்சம் கோடியாகும். ஆண்டுக்கு ரூ.1.71 லட்சம் கோடி செலவு செய்ய வேண்டும். ஆனால்ஒரு லட்சம் கோடிக்குத்தான் திட்டமே. அதிலும் 53 சதவீதம்தான் – ரூ.53,000 கோடிதான் – செலவு நடக்கும். வளர்ச்சி நாயகனின் ஆட்சியில் ரயில்வேக்கு நல்ல காலம் பிறக்கும் என்று எதிர் பார்த்தவர்களுக்கு தளர்ச்சிதான் காத்திருக் கிறது.தமிழகம்தமிழகத்தில் புதிய தடங்களுக்கான திட்டங்களுக்கு பழைய மதிப்பீட்டின்படி ரூ.4,500 கோடி தேவை.

நடப்பு நிதி ஆண் டில் ஒதுக்கியது வெறும் ரூ.23 கோடி மட் டுமே. அகலப் பாதை திட்டங்களுக்கு ரூ.2,800 கோடி தேவை. ஒதுக்கியதோ வெ றும் 243 கோடி மட்டுமே. மதுரை – கன்னி யாகுமரி திட்டம் உள்ளிட்ட இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கு ரூ.5,000 கோடி தேவை. ஒதுக்கியது என்னவோ வெறும் ரூ.443 கோடிதான். இவற்றின் கதி என்ன வாகும் என்று நீங்களே புரிந்து கொள்ள லாம். 2016-17ஆம் ஆண்டு பட்ஜெட்டுக் கும் இதே கதிதான் ஏற்படும்.

தீர்வு

இதற்கு தீர்வு என்ன? சீனா உட்பட மற்ற நாடுகளைப் போன்று ரயில்வேயின் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய அரசுதான் இதில் முதலீடு செய்ய வேண் டும். இந்த அடிப்படையை உணராமல் முன்பு காங்கிரஸ் அரசு எப்படி ரயில்வே முத லீட்டை புறக்கணித்ததோ அதையேதான் இன்று பாஜக அரசும் செய்கிறது.இதைச் சொன்னால், மத்திய அரசிடம் பணம் எங்கே இருக்கிறது என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஐரோப்பிய பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி இந்தியா வந்திருந்த போது பெரும் கார்ப்ப ரேட்டுகளுக்கு 40 சதவீதம் வரி விதித்து பணம் திரட்டுவது ஒன்றே வழி என்றார்.ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு சென்றஆண்டு மட்டும் ரூ.5.89 லட்சம் கோடி வரியை மோடி அரசு விட்டுக் கொடுத்துள் ளது! கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ரூ.45 லட்சம் கோடி வரியை மத்திய அரசு விட்டுக் கொடுத்துள்ளது.

கார்ப்பரேட்டு கள் பொதுத் துறை வங்கிகளிடம் வாங்கிய கடன் திருப்பித் செலுத்தாதது ரூ.3லட்சம் கோடியாகும். பொருளை விற்று வரிவசூலித்த பின் அரசுக்கு கட்டாமல் தாவாஎழுப்பி செய்த வரி ஏய்ப்பு ரூ.5 லட்சம் கோடி யாகும். தனியார் துறையினர் யாரும் இந்திய ரயில்வேயை வளர்க்க முன் வரவில்லை. அரசு முதலீடு செய்யத் தேவையான நிதி யைச் செலுத்தாமல் ஏய்க்கிறவர்கள் அவர் கள். அவர்களிடமிருந்து கிடுக்கிப் பிடி போட்டு வசூலித்தாலே ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கான முதலீடுகளுக்குப் பணம் கிடைக்கும். ரயில்வே வளர தொழில்வளரும். தொழில் வளர வேலை வாய்ப்புவளரும். வேலை வாய்ப்பு வளர மக்களி டம் வாங்கும் சக்தி வளரும். தொழில் மந் தம் உடையும். மொத்த உள்நாட்டு உற் பத்தி அதிகரிக்கும். எளிதான, நம்பகமான இந்த வழியில் செல்ல மத்திய அரசு மறுப் பது ஏன் என்ற கேள்வியை மக்கள் எழுப்பியாக வேண்டும்.

கட்டுரையாளர்: செயல் தலைவர், டிஆர்இயு

Leave a Reply

You must be logged in to post a comment.