indian-railway_350_020315033408முன்பதிவு இல்லாத ரயில்வே டிக்கெட்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறை அமலுக்கு வரஇருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதிய விதி குறித்து ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்திற்கு புதனன்று அளித்துள்ள பதிலில் கூறியதாவது:

வரும் மார்ச் முதல் தேதி முதல் முன்பதிவு இல்லாமல் 199 கி.மீ தூரம் வரை பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட்டுகள், 3 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லும். மேலும் இதே தூரத்துக்கு ரிட்டன் டிக்கெட்டுகளும் வழங்கப்பட மாட்டாது. காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 29 ரயில் நிலையங்களில் நடைமேடை (பிளாட்ஃபார்ம்) டிக்கெட்டுகள் மொபைல் போன்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்,

Leave A Reply