18TH_SUPREME_COURT_1334414f

போராட்டங்களின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய நெறிகள் வகுக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஹர்திக் படேல் ஜாமீன் வழங்க கோரிய மனு விசாரணைக்கு வந்த்து.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.எஸ்.கெஹார், நீதிபதி சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு ‘‘போராட்டங்களின் போது பொது சொத்துக்களுக்கு நாசம் ஏற்படுத்துகின்றனர். அதற்கு யார் பொறுப்பு. இந்த நாட்டை யாரும் சூறையாட முடியாது. பொது சொத்துக்களை நாசப்படுத்துபவர்களை பொறுப்பாளியாக்கி நஷ்டஈட்டை பெற வேண்டும். இந்த விவகாரத்தில் புதிய நெறிமுறைகளை வகுக்க இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஹர்திக் ஜாமீன் பெறுவதில் முனைப்பாக இருக்கிறார். ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை பற்றி கவலைப்படவில்லை. அதை விட மிகப்பெரிய பிரச்சினை போராட்டங்களின் போது பொது சொத்துக்களை நாசப்படுத்துவது. அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண, விரைவில் தீர்வு காண இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. பொது சொத்துக்களை நாசப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாஜக.வோ அல்லது காங்கிரஸோ அல்லது வேறு அமைப்புகளோ, பொது சொத்துக்களுக்கு நாசம் விளைவித்தால் சம்பந்தப்பட்ட அந்த கட்சிகள்தான் பொறுப்பு என்பதை உணர வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply