minor-girlபாஜக ஆளும் ஹரியானாவில் மூர்த்தல் எனும் பகுதியில் டில்லி செல்லும் வாகனங்களில் இருந்து பெண்கள் வலுக்கட்டாயமாக குண்டர்களால் கீழிறக்கப்பட்டு அருகிலுள்ள வயல்வெளிக்கு இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் பாலத்தகாரம் செய்யப்படும் கொடுமை அரங்கேறி வருகிறது.
வழக்கம்மோல் ஹரியானா காவல் துறை வட்டாரங்கள் இதனை வதந்தி எனக் கூறி மறுத்துள்ளனர். அத்துடன் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை அழைத்து இதுகுறித்து புகார்கள் அளித்து தாங்கள் குடும்பக் கௌரவத்தை இழக்க வேண்டாம் என காவல் துறை மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர.
ஆனால் சம்பவங்கள் நடந்தது உண்மை எனவும் அருகிலுள்ள பொது மக்கள் பாதிக்கப்பட்ட பெண்களுககு உடைகள் அளித்து உதவினர் எனவும் தன் பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் கூறினார்.
பாஜக ஆளும ஹரியானாவில் சட்ட ஒழுங்கு நிலை மற்றும பெண்கள் பாதுகாப்பு இப்படித்தான் உள்ளது.

Leave A Reply