புதுதில்லி. பிப்,24BJPCountsCondoms

 புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆயிரக்கணக்கான பீர் பாட்டில்கள், 3 ஆயிரம் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், 500 கருத்தடை ஊசிகள் இருக்கின்றன என பாஜக எம்எல்ஏ கியான்தேவ் அகுஜா பரபரப்பான புள்ளிவிபரங்களை வெளியிட்டார். அதன் மூலம் ஜவஹர்லால்நேரு பல்கலைகழகம் ஒரு சமூகவிரோத கூடமாக மாறிவிட்டதாக பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார். ஆனால் அதற்கு மாறாக அதுவே பாஜகவிற்கு ஆப்பாக மாறியிருக்கிறது.

அகுஜாவின் இந்த கருத்திற்கு சமூக வளைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்து வருகிறது. குறிப்பாக பாஜகவை கேலிசெய்து வரும் பல்வேறு விமர்சனங்கள் பாஜகவினரையே ஓடி ஒழிய வைத்திருக்கிறது. பாஜகவின் அகில இந்திய தலைவரான அமித்ஷாவிற்கே கோபம் வந்து விட்து என்றால் அதன் வீரியத்தை புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக ட்விட்டரில் பாஜக எதிர்ப்பு ஹேஷ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது. #BJPCountsCondoms என்பதுதான் அந்த ஹேஷ்டேக். அதில் வரும் கருத்துக்கள் நகைச்சுவையாகவும். மிகவும் நுட்பமாக பாஜகவின் போலித்தனங்களை தோலுரிப்பதாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக பாஜக எம்எல்ஏக்கள் செய்யும் பிரதான வேலையே எங்கு எத்தனை பேர் ஆணுறை பயன்படுத்துகின்றனர் என மிக துல்லியமாக கணக்கெடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. குறிப்பாக மோடியின் சுவிச்பாரத் திட்டத்தை எவ்வளவு சரியாக செய்துவருகின்றனர்.

யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் பாஜக எம்எல்ஏக்கள் பயன்படுத்திய ஆணுறையை எண்ணுவதில் தீவிரமாக இருந்து வருகின்றனர். எது எப்படியானாலும் கடைசியில் டைம்ஸ்நவ் செய்தி சேனலின் அர்னாப்தான் இறுதி புள்ளிவிபரத்தை சரிபார்த்து வெளியிடுவார்.

இனி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் மீது தேசதுரோக வழக்கிற்கு மாறாக இனி பாலியல் பாலாத்கார வழக்கு பதிவு செய்யப்படும். BJP should file ‘seduction charges’ instead of ‘sedition charges’ against JNU students. #BJPCountsCondoms என்பது உள்ளிட்ட பல்வேறு கமண்ட்ஸ்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

இதனால் தர்மசங்கடத்தில் இருக்கும் பாஜக, அமித்ஷா மூலம் விளக்கம் கேட்டு அகுஜாவிற்கு கடிதம் அனுப்பட்டிருக்கிறதாம். நல்ல வேளை அணுறை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விளம்கேட்டு கடிதம் அனுப்பாது வரைக்கும் சந்தோஷபட வேண்டியதுதான்.

Leave a Reply

You must be logged in to post a comment.