புதுதில்லி. பிப்,24

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமாரின் jnu kanhaiya kumar மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதி மன்றத்தில் புதனன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது,அவரை ஜாமீனில் வெளிவிடுவது விசாரணையைப் பாதிக்கும் எனவும், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இரு மாணவர்களையும் இணைத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை 15 நாட்கள் காவலில் எடுக்க காவல்துறை அனுமதி கோரியது. இதையடுத்து ஜாமின் மனு மீதான விசாரணை பிப்ரவரி 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

ஆனால் புதுதில்லி காவல்துறை தலைவர் பாஸி ஒரு சில தினங்களுக்கு முன்பு கன்னய்யா குமார் ஜமீன் மனு கோரி விண்ணப்பித்தால் அதனை காவல்துறை எதிர்க்காது என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அதற்கு மாறாக ஜமீன் கோருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து பாஸி காவல்துறை தலைவராக செயல்படுகிறாரா ? அல்லது ஸ்யம் சேவக்காக செயல்படுகிறாரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையே பாட்டியாலா நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் மாணவர்களைத் தாக்கியதில் தொடர்புடைய 3 வழக்கறிஞர்களும் காவல் துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். சர்மா என்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு உடனடியாக எவ்வித எதிர்ப்புமின்றி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சட்டத்தை மீறி பத்திரிகையாளர்கள், நீதிமன்றத்திற்கு அழைத்து வருபவர்களை அனைத்து மீடியாக்கள் முன்பும் தாக்கினால் குற்றமில்லை. ஆனால் பாஜக அரசை விமர்சித்தால் தேசதுரோக வழக்கு பதிவம் என்பது இந்திய அரசியல் சட்டப்படி ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது ஆர்எஸ்எஸ் சட்டப்படி ஆட்சி நடைபெறுகிறதா? என கேள்வி எழுப்பட்டு வருகிறது.

Leave A Reply