சென்னை, பிப். 23-

சிபிஐ விசாரணைக் கோரி போராடிய மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள்ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்னய்யகுமாரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், இடதுசாரி -ஜனநாயக சக்திகள் மீது பாஜக அரசின் தாக்குதல்களை எதிர்த்தும், மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையைக் கண்டித்தும் இடதுசாரிக் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தர்ராஜன், அ.பாக்கியம் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இடதுசாரி ஜனநாயக சக்திகள், மாணவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் மக்கள் நலக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார். அவர் மேலும் பேசியதாவது: மதவதம், வகுப்புவாதத்திற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் மீதுவழக்கு போடுவது, தாக்குதல் தொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் மத்தியில்உள்ள பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தகோவிந்த்பன்சாரே, எழுத்தாளர் கல்புர்கி உள்ளிட்ட சிந்தனையாளர்களை கொலை செய்தது. ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவர் ரோகித்வெமுலாவை அங்கிருந்து வெளியேற்றியதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான். ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் அமைப்புக்கு தடை விதித்தது போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. புனே திரைப்படக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை பாஜக நியமனம் செய்கிறது. இதற்கு எதிராக போராடும், குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகள் மீதும், மாணவர்கள் மீதும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் தாக்குதல் தொடுக்கிறார்கள். மாணவர்களுக்கு, ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவாக செயல்படும் இடதுசாரி சக்திகள் மீதும் தாக்குதல் தொடுக்கிறார்கள்.ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அந்த கூட்டத்தில் புகுந்த ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் எழுப்பிய முழக்கத்தின்காரணமாக, மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வழக்கறிஞர் உடை அணிந்துவந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்கன்னய்யகுமாரையும், அவருக்கு ஆதரவாக வாதாட வந்த வழக்கறிஞர்களையும் தாக்கியுள்ளனர். ஆனால் தில்லி காவல் துறையோ அப்படி ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெறவில்லை என்று கூறுகிறது. ஏனென்றால் தில்லி காவல் துறையின் கட்டுப்பாடு மாநில அரசிடம் இல்லை. மாறாக மத்திய அரசிடமும், ராஜ்நாத்சிங் கட்டுப்பாட்டிலும் உள்ளது. பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழகத்தில், மதிமுக பொதுச் செயலாளர் நடமாட முடியாது என்று மிரட்டுகிறார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை நாடு கடத்த வேண்டும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜவின் மகள் அபராஜிதாவை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றுவன்முறையைத் தூண்டும் வகையில் வெறித்தனமாகப் பேசி வருகிறார். ஆனால் அவர் மீது இதுவரை எந்த வழக்கும் போடவில்லை. தமிழகத்தில் மணல் கொள்ளைநடைபெறுகிறது என்று கூறியவுடன் என் மீது வழக்கு தொடுத்த அதிமுக அரசு, மாணவியை கொலை செய்ய வேண்டும் என்றுகூறும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு போடவில்லை, ஏன்? வன்முறையை தூண்டும் விதமாக பேசும் எச்.ராஜா மீது வழக்கு தொடுக்க வேண்டும். மேலும் அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில்,32 விழுக்காடு வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக மதவாதத்தை தூண்டிவிடும் செயலில் ஈடுபட்டு வருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. அதன் காரணமாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்பினர் நடத்திய கூட்டத்தில், வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சிலர் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். கன்னய்ய குமார், அபராஜிதா உள்ளிட்ட மாணவர்கள் மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எச்.ராஜாவின் கருத்து குறித்து வெங்கைய்யா நாயுடு கூறுகையில் அவர் பேசியது தவறு என்றும், அவரது சொந்த கருத்து என்றும்கூறுகிறார். இப்படி பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டாமா?இவ்வாறு அவர் பேசினார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிறுத்தை மாறன், மதிமுக மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன், சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் மாநில செயலாளர் எஸ்.பாலசுந்தரம், எஸ்.யு.சி.ஐ. மாநில செயலாளர் ஏ.ரெங்கசாமி உள்ளிட்டோரும் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: