Yashpal Singh (L), Vikram Chauhan (C) and Om Sharma (R). (Express Photo Abhishek Angad)புதுதில்லி, பிப்.23-

காவல்துறையின் துணையோடு, சங்பரிவார் கும்பலை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவ பேரவை தலைவர் கன்னய்ய குமாரை திட்டமிட்டு தாக்கியது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து இந்தியா டுடே டிவி சேனல் நடத்திய புலனாய்வில் வீடியோ ஆதாரத்துடன் தெரிய வந்திருக்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் கன்னய்ய குமார் காவலின் போது மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய வீடியோவை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. .

பாஜகவை சேர்ந்த விக்ரம்சிங் சௌகான் உள்ளிட்ட மூன்று வழக்கறிஞர்கள் தாங்கள் காவல்துறையினரின் உதவியுடன கன்னய்ய குமாரை மூத்திரம் வருமளவுக்கு கடுமையாகத் தாக்கியதாக தெரிவிப்பது தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் தெரிய வந்திருக்கிறது. யஷ்பால் சிங் என்ற வழக்கறிஞர் தனக்கு ஜாமீன் வேண்டியதில்லை எனவும்,ஜெயிலுக்குப் போனால்தான் அங்கும் கன்னய்ய குமாரை மறுபடியும் தாக்க இயலும் எனவும், அடுத்த தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும் எனவும் கூறயதும் வீடியோவில் தெளிவாக பாதிவாகியிருக்கிறது. யூனிபாமில் இல்லாதிருந்தால் தாக்குதலில் நாங்களும் பங்கு கொண்டிருபோம் என காவல்துறையினர் தங்களிடம் தெரிவித்ததாக வழக்கறிஞர்கள் கூறியதும் தெரியவந்திருககிறது. இது குறித்து விசாரிக்க உச்சநீதி மன்றம் இன்று ஓப்புக் கொண்டுள்ளதாகவும் தாவல்கள் தெரிவிக்கின்றன

Leave A Reply