bjp sinhaபாட்னா, பிப்.23-

ஜவஹர்லால் நேருபல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்ய குமாரை தேச விரோதியாக சித்தரிப்பதற்கு பீகார் பாஜக மூத்த தலைவரும், பாட்னா எம்.பி.யுமான சத்ருக்கன் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் பேரவை தலைவர் கன்னய்ய குமர் தேசத்திற்கோ, அரசியல் சட்டத்திற்கோ எதிரானவர் அல்ல. இந்தியாவில் பேச்சுரிமை பாதுகாக்க பட வேண்டும். அப்போதுதான் வேற்றுமையில் ஒற்றுமையை பேணி பாதுகாக்க முடியும். பல்கலைகழகத்திற்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனை இது. துணைவேந்தர் பிரச்சனையை கையாண்ட விதமே இந்த நிகழ்வுக்கு காரணம். கன்னய்ய குமார் ஒரு பீகாரி என்பதால் மட்டும், நான் அவரை ஆதரிக்க வில்லை. நான் படித்த மற்றும் கேட்ட வரையில் அவர் சேசவிரோதமாக எங்கும் பேசவில்லை. இது நீதி சம்மந்தப்பட்ட விஷயம். நேர்மையிலும், உண்மையிலும் மட்டுமே தனக்கு நம்பிக்கையிருக்கிறது. நான் பாஜகவை சார்ந்திருப்பதால் அக்கட்சி செய்யும் எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியாது. கன்னய்யகுமார் விஷயத்தில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என சந்ருகன் சின்கா தெரிவித்துள்ளார். மேலும் நீதி மன்ற வளாகத்திலேயே பத்திரிக்கையாளர்களும், மாணவர்ளும் தாக்கப்பட்டதையும் அவர் கண்டித்துள்ளார்.

 

Leave A Reply

%d bloggers like this: