hyderabad ஐதாராபாத் புதுதில்லி, பிப்.23-

உலக அளவில் தரமான நகர வாழ்க்கை பட்டியலில் இந்தியாவின் ஐதராபாத் நகரம் 138 வது இடத்தில் இடம் பெற்றிருக்கிறது.

தரமான வாழ்க்கைக்கு உத்தரவாதமான 230 நகரங்களில் உலக அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நகரங்களில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், இழப்பீடுகள் மற்றும் சர்வதேச ஊழியர்களுக்கான ஊக்கத் தொகைகள் மற்றும் வறுமை, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, மறு கட்டுமானம், அரசியல் ஸ்திரத்தன்மை பேன்றவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா உலகின் முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் சுவிசர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் அங்லாந்து, ஜெர்மனியின் மூனிச் மற்றம் கனடாவின் வான்கூவல் போன்ற நாடுகள் அடுத்தடுத்த 5 இடங்களை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா நகரங்களில் ஒன்றான ஜதராபாத் 138 வது இடத்தை பெற்றுள்ளது. புனே நகரம் 145 இடத்தில் உள்ளது. மேலும் மிகப் பெரிய மெட்ரோ நகரங்களான டெல்லி மற்றும் மும்பை இந்த பட்டியலில் முறையே 154 மற்றும் 152வது இடங்களில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆசிய நகரங்களில் சிங்கப்பூர் 26 வது இடத்தை பிடித்துள்ளது. மலேசியாவின் கோலாலம்பூர் 84வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஜப்பானில் டோக்கியோ உட்பட நான்கு நகரங்கள் இடம் பெற்றுள்ளது.

இத் பட்டியலில் சீனாவின் பெய்ஜிங்க நகரம் இந்திய நகரங்களை பின்னுக்கு தள்ளி 118வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்ரீலங்காவின் கொலும்பு நகரம் 132வது இடத்தில் உள்றளது.மேலும் இந்த பட்டியலில் தரமான வாழ்க்கைக்கான நகரங்களின் பட்டியலில் இந்த பட்டியலில் இராக்கின் தலைநகர் கடைசி இடத்தில் உள்ளது.

Leave A Reply