yesuவரலாற்றை திரித்து எழுதுவதில் புகழ்பெற்று விளங்கும் சங்பரிவார் கும்பல், அடுத்த கட்டமாக ஏசுகிறிஸ்துவை இலக்காக கொண்டு களமிறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஏசு கிறிஸ்து பிறப்பால் இந்து என்றும் அவரது தாய்மொழி தமிழ் என்று திரித்து புத்தகம் வெளியிட்டிருக்கின்றனர். இது பெரும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அறிவியல் ரீதியான ஆதாரம் இல்லாத உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தொடர்ந்து பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சும் தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது கணேஷ் தாமோதர் சாவர்கர் என்பவர் கிறிஸ்ட் பாரிசா என்ற புத்தகத்தை வரும் 26ம் தேதி வெளியிட உள்ளார். மெமோரியல் என்ற அமைப்பு வெளியிடும் இந்த புத்தகத்தில் ஏசு கிறிஸ்துவின் பெயர் கேசவ் கிருஷ்ணா என்று தெரிவித்துள்ளார். அது தமிழ் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் விஸ்வகர்மா சாதியைச் சேர்ந்த ஆசாரி குலத்தில் பிறந்தவர் என்பதும் இந்துக்களை போல கருப்பு நிறம் கொண்டவர் என்றும் தச்சு தொழில் மேற்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசுவின் தந்தை பெயர் சேசப்பன் என்றும் அதுவே காலப்போக்கில் மறுவி சேஷப் என்றும் ஜோசப் என்றும் அழைக்கப்படுகிறது என்று புதிதாக ஒரு விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகு தனது யோகத்திறமையால் உயிரோடு இருந்தார். மேலும் சகதோழர்களை மீட்டு சித்த வைத்திய முறையில் சிலுவை காயங்களை குணப்படுத்தினார். பிறகு இறுதி காலகட்டங்களில் இமயமலைப்பகுதியில் சிவ பெருமானை நோக்கி ஏது தியானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 3 வருட கடும் தவத்திற்கு பிறகு ஏசுவிற்கு சிவபெருமான் காட்சியளித்து தார் என்றும் பின்னர் ஏசுவை ஈஷாநாத் என்று முனிவர்கள் அழைத்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தன்49 வது வயதில் உடலை விட்டு ஆழ்நிலை சமாதி நிலைக்கு சென்று முக்தியடைந்தார் என அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1946ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம் வெளியிடப்படுவதற்கு தற்போதைய சூழலில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இது குறித்து சாவர்கர் தேசிய நினைவகத்தின் செயல் தலைவர் ரஞ்சித் சாவர்கர் கூறுகையில் 70 வருடம் கழித்து புத்தகத்தை பப்ளிஷ் செய்வதல் எந்த உள்நோக்கமும் கிடையாது. புத்தகம் குறித்து சர்ச்சை எழும். ஆனால் இது புதிது கிடையாது ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகத்தையே மாராத்தியில் வெளியிடுகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் புத்தகத்தில் உள்ள அம்சங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. பாதிரியார் வார்னர் டிசோசா கூறுகையில் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை இந்த புத்தகம் அசைக்காது என்றும் யூகத்தின் அடிப்படையில் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் – இன் சேவகராக இருந்து தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியும் இதே பாணியில்தான் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் 40வகையான விமானங்களை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்தனர் என்று கூச்சநாச்சமின்றி விஞ்ஞானிகள் மாநட்டிலேயே கூறியிந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply