புதுதில்லி,பிப்.22

ஒரு மொபைல் போனை ரூ.251 என மிகக் குறைந்த விலைக்கு அளிப்பதாக மொஹித்கோயல் என்வர் விளம்பரப்படுத்தியதன் பேரில் 7 கோடி முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு ஒரு மொபைல் தர முடியுமா ? என பல்வேறு துறையினர் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் தர முடியும் என கோயல் கூறுகிறார்.

ரிங்கிங் நிறுவனத்தின் உரிமையாளரான கோயல் இத்தொகையில் தனக்கு ஒரு மொபைல் போனுக்கு ரூ.31 லாபமும் கிடைக்கும் என்கிறார்.

காவல்துறை மற்றும வருமான வரித் துறையினர் கேள்விகளுக்கும் பதிலளித்து வரும் இவர், பல வசதிகளுடன் கூடிய இம்மொபைல் போன் ஏப்ரல் 15 முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் எனவும், ஜூன் மாதம் முடிவில் 50 லட்சம் மொபைல்கள் அளிக்கப்பட்டு விடும் எனவும் கூறுகிறார்.

பல்வேறு மொபைல் நிறுவனங்கள் இந்நிறுவனம் குறித்து சந்தேகங்களை எழுப்பி வாடிக்கையாளர்களின் பணப்பாதுகாப்பு குறித்து அச்சம் தெவரிவித்து மத்திய அரசுக்குப் புகார் கடிதமும் அனுப்பியுள்ளனர். தனது வாக்குறுதியை மொஹித் கோயல் காப்பாற்றி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்வாரா அல்லது வாடிக்கையாளர்கள் மீதான பிற மொபைல் நிறுவன அதிபர்களின் தீடீர் பாசமும். அவர்கள் வெளியிடும்  அச்சமும் உண்மையாகி விடுமா? என்பதற்கு காலம்தான் பதில் கொல்ல வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.