ஈரோடு, பிப்.22-
மோடி அரசின் மதவாத அணுகுமுறை இந்திய நாட்டை துண்டு துண்டாக்கிவிடும் என்று மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ எச்சரித்தார்.

மக்கள் நலக் கூட்டணியின் மாற்றுஅரசியல் எழுச்சிப் பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக மாபெரும் பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் நடைபெற்றது.

பொதுக் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் உரையாற்றிய மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான வைகோ, சமஸ்கிருத மொழியை ன்றாவது மொழியாக வரும் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் நீதிமன்றத்தில் வகுப்புவாதிகளால் தாக்கப்பட்டதும், உச்சநீதிhqdefaultமன்றம் பாதுகாப்பு தர வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும், இரண்டாவது முறையாக கன்னய்ய குமார் மீது தாக்குதல் நடைபெற்றது கண்டிக்கத்தக்கது என்றும், தாக்குதலை தடுத்த வழக்கறிஞர்கள் மீதும்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும்கூறிய வைகோ,  இவர்கள் என்ன நாஜி கும்பல்களா  எனக் கேள்வி எழுப்பினார்.   நாடாளுமன்றத்தில், இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்றுதான் உரையாற்றியபோது சிலர் வினா எழுப்பினர் என்றும், ஆம் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழன் என்று கூறியதாகவும் வைகோ தெரிவித்தார். இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை உணராத மோடி அரசின் போக்கினால் நாடுதுண்டு துண்டாக சென்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், நாம் அதைத்தடுக்க வேண்டும் என்றும்  அவர் சுட்டிக்காட்டினார்

Leave a Reply

You must be logged in to post a comment.