புவனேஸ்வர், பிப்.22-

அரிய வகை கண் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பேஸ்புக் பதிவின் மூலம் ரூ1லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது.

புவனேஸ்வல் பகுதியைச் சேர்ந்த அனில் ஆர்யா என்ற 6வயது சிறுவன் ரெட்டினோ பிளாஸ்டோமா என்ற அரிய வகை கண் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 19ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இச்சிறுவனின் சிகிச்சைக்கு உதவுமாறு கர்விந்தர் சிங்  சத்தா என்ற சமூக ஆர்வலர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் அச்சிறுவனின் கண் சிகிச்சைக்கு பணம் அனுப்பி உள்ளனர். தற்போது அச்சிறுவனின் சிகிச்சைக்கு ரூ 1லட்சம் வரை பணம் கிடைத்துள்ளது. மேலும் நியூசிலாந்தைச் சேர்ந்த (நெட்டிசன்ஸ்) மற்றும் அரசியல் தலைவர்கள் சிலரும் சிறுவனின் சிகிச்சைக்கு உதவ முன் வந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சிறுவனின் தாய் ராகுலி தேவி கூறியதாவது:- எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மகனின் சிகிச்சைக்கு  உதவிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.facebook-logo

Leave A Reply

%d bloggers like this: