01 - for mdu- simbu (2)
கோவை, பிப். 22 –
ஆபாச பாடலை எழுதிப் பாடி வெளியிட்ட விவகாரத்தில் நடிகர் சிம்பு, திங்களன்று கோவை காவல்துறையினரிடம் நேரில் ஆஜரானார்.
மூன்று நிமிடங்கள் மட்டுமே காவல்நிலையத்தில் இருந்த அவர், அதற்குள் முப்பத்தைந்து கேள்விகளுக்கு பதிலளித்து விட்டதாகக் கூறி, உடனடியாக கிளம்பிச் சென்றனர்.

பெண்களை இழிவு படுத்தும் வகையில் பெண்களுக்கு எதிரான பாடலை பாடியதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது கடந்த டிசம்பர் மாதம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ராதிகா, கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த
புகாரின் பேரில் காவல்துறையினர், சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல், சென்னையிலும் சிம்பு மற்
றும் அனிருத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக சிம்புவும், அனிருத்தும் கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி இரண்டு முறை போலீசார்சம்மன் அனுப்பினர். இதையடுத்து இசையமைப்பாளர் அனிருத் கடந்த மாதம் பந்தயசாலை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துச் சென்றார். ஆனால், சிம்பு காவல்நிலையத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் பந்தயசாலை காவல் நிலையத்
தில் சிம்பு நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் சிம்புவின் தந்தையும், இயக்குநருமான டி.ராஜேந்திரன் ஞாயிறன்று இரவு பந்தயசாலை காவல் நிலையத்திற்கு வந்து வழக்கு விபரம்குறித்து கேட்டுச் சென்றார். இதனையடுத்து திங்களன்று கோவை வந்த நடிகர் சிம்பு, காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல்நிலையத்தில் தனது தந்தைமற்றும் வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் கேட்ட கேள்விகளுக்கு சிம்பு பதில் அளித்தார். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிம்பு, தான்எந்த தவறும் செய்யவில்லை
எனவும், காவல்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்கையில், மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் கேட்ட 35 கேள்விகளுக்கு, நடிகர் சிம்பு 3 நிமிடங்களுக்குள் பதிலளித்து சென்றதாக தெரிவித்தனர்.

பத்திரிகையாளர்களை திசை திருப்பிய காவல்துறை

முன்னதாக, பந்தயசாலை காவல்நிலையத்தில் நடிகர் சிம்பு ஆஜராவர் என அதிகாலையிலேயே உளவுத்துறையின் மூலம் பத்திரிகையாளர்களுக்கு ரகசியம் சொல்வது போல்சொல்ல வைத்தனர். அனைத்து பத்திரிகையாளர்களும் பந்தய சாலை காவல்நிலையத்தில் குவிந்திருந்தபோது. சத்தமில்லாமல் சிம்புவை காந்திபுரம் காவல்நிலையத்தில் ஆஜராக வரவழைத்துள்ளனர். இதனை கடைசி நிமிடத்தில் அறிந்த பத்திரிக்கையாளர்களும் காந்திபுரம் காவல் நிலையத்திற்கு படையெடுத்தனர். இதனிடையே காவல்நிலையம் சென்ற சிம்பு மூன்று நிமிடங்களுக்குள் வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கைய
சைத்து கிளம்பி சென்றார்.

Leave A Reply