சியோல், பிப்.22

தென்கொரியாவுக்குச் சொந்தமான டோக்டோ என்ற தீவை ஜப்பானிய மொழியில் டேக்ஷிமா எனப் பெயரிட்டு ஜப்பான் சொந்தம் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்  என தென் கொரியத் தலைநகர் சியோவில் பிப் 22 அன்று  ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் ஒருபகுதியாக சியோலில் உள்ள ஜப்பான் தூதரகம் முன்பு ஜப்பான் புத்தகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழித்தெரிந்தனர்.

தீவைச் சொந்தம் கொண்டாடி விழா நடத்தியமைக்காக ஜப்பான் தூதரை அழைத்து தென் கொரிய அரசு கண்டனம் தெரிவித்தது.

வரலாறு பூகோளரீதியாகவும், சர்வதேச சட்டப்படியும் டோக்டோ தீவு தென் கொரியாவுக்கே சொந்தமானது எனவும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மீது மேலாதிக்கம் செய்திவரும் அமெரிக்கா போல தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் ஜப்பான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு அப்பிராந்தியத்தில் உருவாகி வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: