ரியாத், பிப்.22
சவூதி அரேபியா நிலத்தடி நீரையே முழுமையாக நம்பியிருக்கும் நாடு. இந்நாட்டில் நதிகளோ ஏரிகளோ இல்லை. இன்றுள்ள நிலையில் இன்னமும் 13 ஆண்டுகளுக்கு மட்டுமே நிலத்தடி நீர் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. விவசாய நிலங்களிலும் தண்ணீர் குறைந்து வருகிறது. மறுபக்கம் எண்ணெய் விலை வீழ்ச்சியாலும் இந்நாடு பொருளாதார ரீதியாக தத்தளித்து வருகிறது. அதே நேரத்தில் ராணுவர் செலவுகளும் அதிகரித்து வருகிறது. எனவே முதல் முறையாக குடிநீருக்கும் கட்டணம் வசூலிக்க சவூதி அரேபிய அரசு முடிவு எடுத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: