லக்னோ. பிப்,22

aligarh muslim universityத்தின் சிற்றுண்டி விடுதியில் பசுமாமிசம் பரிமாறப்படுவதாக பிரச்சாரம் செய்து வந்தனர். மேலும் இதனை வைத்து அங்கு கலவரத்தை தூண்ட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வந்தனர். அந்த விசாரணையின் முடிவில் சங்பரிவார் அமைப்புகள் கூறி வந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அலிகார் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் ஜமீர் உதீன் பல்கலைகழக வளாகத்திற்குள் பசு மாமிசம் சாப்பிடுவதாக கூறுவது தவறான தகவல் ஆகும். இதனை காவல்துறையினரின் விசாரணையும் உறுதி படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். சங்பரிவார் அமைப்பினர் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தற்போது அம்பலமாகியிருக்கிறது

Leave A Reply