அகமதாபாத், பிப்.22-

குஜராத் மாநிலத்தில் பள்ளி மாணவிகள் செல்போன் பயன்படுத்த கிராமப்பஞ்சாயத்து தடை விதித்துள்ளது. இதன் மூலம் இளம் பெண்கள் காதல் வலையில் கிக்காமல் பாதுகாக்க முடியும் எனவும் பஞ்சாயத்து தெரிவித்திருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மெக்சானா மாவட்டத்தில் உள்ள சுராஜ் கிராமத்தில் பள்ளி மாணவிகள் செல்போன் பயன்படுத்த கிராமப்பஞ்சாயத்து தடை விதித்துள்ளது. பள்ளி மாணவிகள் செல்போனை வைத்திருக்க கூடாது என்றும், தங்கள் பெயரில் செல்போனை வாங்க கூடாது என்று பஞ்சாயத்தார் தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவிகள் தங்கள் பெற்றோரின் செல்போன்களை வேண்டுமானால் வீட்டிற்குள் பயன்படுத்தி கொள்ளலாம். அதனை வெளியிடத்தில் வைத்துக்கூட பேசக்கூடாது என்று மிரட்டியிருக்கிறது. மேலும் தடையை மீறி செல்போனை பயன்படுத்தும் பள்ளி மாணவிகளுக்கு ரூ2100 அபராதம் விதிக்கப்படும். இந்த தடை விதிப்பிற்கு காரணம் பல பெண்கள் இந்த செல்போன் மூலமே வழிதவறி சென்று விடுகின்றனர். குறிப்பாக இளம் பருவ வயதில் இந்த செல்போன் மூலமே காதல்வயப்படுகின்றன. இதனை தடுக்கவே இந்த ஏற்பாடு. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருந்து பள்ளி மாணவிகளை பாதுகாக்கவே இந்த முடிவு. வீட்டில் இருக்கும் பெற்றோர்களின் செல்போன எடுத்துக் கொண்டு தெருவில் செல்லவோ, பேசவோ கூடாது. வீட்டிலேயே பேசினாலும், பெற்றோர்களின் கண்காணிப்பில் மட்டுமே பேச வேண்டும் என்றும் அந்த பஞ்சாயத்து அறிவுறுத்தியிருக்கிறது. இதற்கு அனைத்து சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைத்து பஞ்சாயத்து நிர்வாகம் ஒப்புதல் வாங்கியிருக்கிறது. குறிப்பாக தலித், படேல், தாகூர், ராபரி உள்ளிட்ட சமூகத்தினரும் இதில் உள்ளடங்குவர். அதே நேரம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த முயற்சி என்பது பெண்களை பாதுகாப்பது என்பது மிகவும் மூடத்தனமானது. மாறாக பெண்களை இன்னும் அடிமைகளாக நடத்துவதற்கான நவீன ஏற்பாடுதான் இந்த தடை. அதே போல் காதலிப்பது என்பது மிகப்பெரிய குற்றம் போன்ற உணர்வை ஏற்படுத்தற்கான உள்நோக்கமும் இந்த தடையில் உள்ளங்கியிருக்கிறது. மீண்டும் தேசத்தை கற்காலத்திற்கு பின்னோக்கி கொண்டு செல்வதே குஜராத்தின் மாதியாக இருக்கிறது. இதனையே மத்தியில் ஆளும் மோடி அரசு வளர்ச்சிக்கு முன்மாதரி என குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கதுVillage ban

Leave a Reply

You must be logged in to post a comment.