ஸ்ரீநகர், பிப்.22-

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் 2 ராணுவத்தினர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்பூர் பகுதியல் சனியன்று சென்று கொண்டிருந்த சி.ஆர்.பி.எப் வாகனம் மீது துப்பாக்கி ஏந்திய போலீசார் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட3 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் பலப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து தீரிவாதிகள் அப்பதியில் இருந்த தொழில் முனைவோர் வளச்சி மையத்திற்குள் நுழைந்தனர். அந்த கட்டிடத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் பயிற்சியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த கட்டிடத்தில் இதுவரை 2 ராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் திங்களன்று 3வது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது.  மேலும் 3 தீவிரவாதிகள் வரை அந்த கட்டிடத்தில் பதுங்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் கடந்த 6 ஆண்டுகளில் நடை பெற்ற தீவிரவாத தாக்குதலில் இதுவே மிகப்பெரிய தாக்குதல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.