dowryஜெய்பூர், பிப்.20-
ராஜஸ்தான் தனது வருங்கால கணவர் வரதட்சணையாக கார் தராவிட்டால் திருமணம் நடக்காது என கூறியதால் பிப்ரவரி 22 அன்று நடக்க இருந்த திருமணத்தை பாரதியாதவ் (22) நிறுத்தி உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியரான மணமகன் தயாள் மற்றும் அவரின் தாத்தா ஆகியோர் 6 மாத காலத்திற்குள் கார் தர ஒப்புக்கொண்டு பத்திரத்தில் கையெழுத்திடவும் மணமகள் வீட்டாரை வற்புறுத்தியுள்ளனர். நிச்சயதார்த்தத்தின் போது நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளும் தரப்பட்டுள்ளது. தொடர்ந்த நெருக்கடியின் காரணமாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மணமகள் மற்றும் உறவினர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

Leave A Reply